ஸ்கூட்டர் மாதிரி தான் இருக்கும்! பெண் கஸ்டமர்களை டார்க்கெட் செய்து உருவாக்கப்படும் கார்கள்

சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. ஆயிரம் சொன்னாலும், இன்னும் நிறைய விஷயங்களில் பெண்கள் ஆண்களை காட்டிலும் பின்தங்கியே உள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கார்களை ஓட்டுவது என்பது இன்னமும் நிறைய பெண்களுக்கு சவாலான காரியமாகவே உள்ளது. இதனால்தான், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஓட்டுவதற்கு ஏற்ற கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

best automatic cars for women

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஏஎம்டி (Maruti Suzuki Swift AMT): ஸ்விஃப்ட் கார் ஆனது ஸ்டைல், செயல்படுதிறன் மற்றும் குறைவான விலை என மூன்றும் சரியான அளவில் கலந்த கலவை ஆகும். இந்த காரை ஏஎம்டி என்கிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பயன்படுத்துவது பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஸ்விஃப்ட் ஏஎம்டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.75 லட்சத்தில் இருந்து ரூ.9.45 லட்சம் வரையில் உள்ளன.

best automatic cars for women

ஹூண்டாய் வென்யூ எஸ் (ஆப்ஷ்னல்) டர்போ டிசிடி (Hyundai Venue S (O) Turbo DCT): கார் ஆர்வலர்கள் மத்தியில் வென்யூ கார் அதன் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பிரபலமானதாக விளங்குகிறது. இந்த என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வென்யூ காரின் எஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் இருந்து பெறலாம்.

best automatic cars for women

டாடா பஞ்ச் ஏஎம்டி (Tata Punch AMT): அளவில் சிறியதான டாடா கார், பஞ்ச் ஆகும். இதனை ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெண்கள் சவுகரியமாக பயன்படுத்தலாம். இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.60 லட்சம்- ரூ.10 லட்சமாக உள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

best automatic cars for women

கியா சொனெட் ஐஎம்டி/ டிசிடி (Kia Sonet iMT/ DCT): கொரியன் ஸ்டைலில் ஸ்டைலிஷான காரை எதிர்பார்க்கும் பெண்களுக்கு சொனெட் சிறந்த சாய்ஸாக இருக்கும். இதில், ஐஎம்டி மற்றும் டிசிடி என 2 விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் கியா சொனெட் காரின் விலை ஆனது ரூ.12.51 லட்சம்- ரூ.15.77 லட்சமாக உள்ளது.

best automatic cars for women

மாருதி சுஸுகி பலேனோ ஆட்டோமேட்டிக் (Maruti Suzuki Baleno AT): விசாலமான உட்புற கேபினின் இடவசதியினாலும், அதிக செயல்திறனினாலும் பலேனோ ஆனது வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. ரூ.7.95 லட்சத்தில் இருந்து ரூ.9.83 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களை பெண்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

best automatic cars for women

ஹோண்டா சிட்டி சிவிடி (Honda City CVT): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரேயொரு ஹோண்டா காரான சிட்டி அதன் தாழ்வான உடலமைப்பினால் உலகம் முழுக்க பிரபலமானதாக விளங்குகிறது. இந்த காரை சிவிடி கியர்பாக்ஸ் உடன் ஓட்டுவது பெண்களுக்கு வசதியாக இருக்கும். சிட்டி சிவிடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.95 லட்சம்- ரூ.20.05 லட்சமாக தற்சமயம் உள்ளது.

best automatic cars for women

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஏஎம்டி (Hyundai Grand i10 NIOS AMT): இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார்களுள் ஒன்று, கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். இதனை ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வாங்கி பெண்கள் பயன்படுத்தலாம். ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.43 லட்சத்தில் இருந்து ரூ.8.56 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை எல்லாமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார்கள் ஆகும். ஆட்டோமேட்டிக் கார்களை ஆரம்பத்தில் பயன்படுத்துவது சற்று சிரமமாக இருந்தாலும், ஓரளவிற்கு பழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம் என்றால், ஸ்கூட்டரை ஓட்டுவதுபோல் ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டுவது எளியது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 8:00 [IST]
English summary
International womens day special best cars for women
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X