கோடீஸ்வரர்களே இந்த காரை வாங்க தயங்குறாங்க! 6 மாசத்துல 87 கார் தான் வித்திருக்குது!

கடந்த 6 மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் தான் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக இருக்கிறது. ஆனால் அதே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் மற்றொரு வாகனம் மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகியுள்ளது. இந்த காருக்கு ரூ7 லட்சம் தள்ளுபடி வழங்கியும் விற்பனை பெரியதாக இல்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக பதிவாகியுள்ளது. கடந்த 6 மாத விற்பனை விபரங்களில் இந்த கார் மட்டும் 99,345 கார்கள் விற்பவனையாகியுள்ளது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்திலேயே குறைவான எண்ணிக்கையில் விற்பனையான கார் என்றால் ஐயானிக் 5 கார் தான். இந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 84 கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

Ioniq 5 sales Fy26

இந்த 2025ம் ஆண்டு முழுவதுமாக கணக்கிட்டால் கூட 135 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் ஸ்டாக்கை காலியாக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.இதற்காக இந்த காருக்கு ரூ7 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இருந்தாலும் இந்த காரின் விற்பனை மிக குறைவாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 1 இலக்க எண்ணிக்கையிலேயே விற்பனையாகியுள்ளது.

இந்த கார் கடந்த ஜனவரி மாதம் 16 வாகனங்களும், பிப்ரவரி மாதம் 16 வாகனங்களும், மார்ச் மாதம் 19 வாகனங்களும், ஏப்ரல் மாதம் 16 வாகன்ஙகளும், மே மாதம் 11 வாகனங்களும், ஜூன் மாதம் 12 வாகனங்களும், ஜூலை மாதம் 25 வாகனங்களும், ஆகஸ்ட் மாதம் 14 வாகனங்களும், செப்டம்பர் மாதம் 6 வாகனங்களும் விற்பனையாகியுள்ளது. இப்படி பார்த்தால் மொத்தமாக 135 வாகனங்கள் இந்த ஆண்டில் விற்பனையாகியுள்ளது.

Ioniq 5 sales Fy26

இந்த ஹூண்டாய் ஐயானிக் 5 காரை பொருத்தவரை 45.95 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 12.3இன்ச் ஸ்கரீன், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் ஸ்கிரீன், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், விர்ட்சுல் இன்ஜின் சத்தம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக், மல்டி கோலிஷன் அவாய்டென்ஸ் பிரேக், லெவல் 2 அடாஸ், 21 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

இந்தகாரின் உட்புறம் சுற்றுசூழலுக்க தீங்கு விளைவிக்காத பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாஃப்ட் டச் மெட்டிரியல் டேஷ்போர்டு பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. ஆர்ம் ரெஸ்ட் பகுதியில் பிக்ஸல் டிசைன்களும், சீட் கவர்கள், ஸ்டியரிங் வீல், கார் கிராஷ் பேட் ஸ்விட்ச்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Ioniq 5 sales Fy26

இந்த காரில் 72.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளுது. இந்த காரில் ஒரு முறை சார்ஜ் போட்டால் 631 கி.மீ வரைபயணிக்கும் திறன் கொண்டது.இந்த காரில் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது217 எச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. இந்த காருக்கு 800 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளது. இந்த கார் 10-80 சதவீதம் வரை சார்ஜ் ஏற 18 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காஸ்ட்லி கார்களை பணக்காரர்கள் வாங்குவார்கள். ஆனால் இந்த கார் பலரது விருப்பங்களுக்கு மாறாக இருக்கலாம். இந்த கார் குறைந்தவிலையில் விற்பனைக்கு வந்தால் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் இது இறக்குமதி செய்யப்படும் கார் என்பதால் விற்பனை குறைவாக உள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, October 29, 2025, 10:55 [IST]
English summary
Ioniq 5 sales fy26 hyundai lowest selling ev in first half
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X