ஜெயா டிவி சிஇஓ-னு சொன்னாங்க சிம்பிளாக வந்துட்டு போறார்!! 53 லட்ச ரூபாய் காரை முதல் ஆளா டெலிவிரி!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து உலகளவில் பிரபலமான கார்களுள் ஒன்று, கோல்ஃப் (Golf) ஆகும். உலகின் பல நாடுகளில் நீண்ட வருடங்களாக ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரின் புதிய ஜிடிஐ (GTI) வெர்சன் 'கோல்ஃப் ஜிடிஐ' என்கிற பெயரில் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ கார்களை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன்படி, கோல்ஃப் ஜிடிஐ காரை முதல் ஆளாக தற்போது டெலிவிரி பெற்றிருப்பது யார் என தெரிந்தால் ஆச்சிரியப்படுவீர்கள்.

இந்தியாவில் நீண்ட காலத்திற்கு பின் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார், 'கோல்ஃப் ஜிடிஐ' என்கிற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான கோல்ஃப் காரை காட்டிலும் செயல்திறன்மிக்கதாக, அதற்கேற்ப மூர்க்கமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள கோல்ஃப் ஜிடிஐ கார்களை ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் வெறும் 150 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

volkswagen golf gti delivery start

இத்தகைய அரிதான லேட்டஸ்ட் ஃபோக்ஸ்வேகன் காரை முதல் கஸ்டமராக டெலிவிரி பெற்றிருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெயா டிவி (Jaya TV) நிறுவனத்தின் சிஇஓ விவேக் ஜெயராமன் (Vivek Jayaraman) ஆவார். ஜெயா டிவி என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்துவது மட்டுமின்றி, சென்னையில் வேளச்சேரியில் ஜாஸ் சினிமாஸ் (Jazz Cinemas) என்கிற பெயரில் திரையரங்கம் ஒன்றையும் விவேக் ஜெயராமன் சொந்தமாக வைத்துள்ளார்.

விவேக் ஜெயராமன் வேறு யாருமில்லை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் தோழியான வி.கே சசிகலாவின் அண்ணன் மகன் ஆவார். மேலும், மறைந்த ஜெ.ஜெயலலிதாவிற்கும் நெருக்கமானவர் விவேக் ஜெயராமன் ஆவார். வீட்டில் ஏற்கனவே சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) காரை வைத்திருக்கும் இவர் புதியதாக ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கியுள்ளார்.

volkswagen golf gti delivery start

பளபளப்பான வெள்ளை நிறத்திலான பிராண்ட்-நியூ கோல்ஃப் ஜிடிஐ காரை ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து விவேக் ஜெயராமன் டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், வெறும் 150 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள கோல்ஃப் ஜிடிஐ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.52.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவிற்கு கோல்ஃப் ஜிடிஐ காரின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம், இந்த காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யவில்லை. கார் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த பவர்ஃபுல்லான ஃபோக்ஸ்வேகன் காருக்கு போட்டியாக எந்த காரும் இல்லை என்றாலும், ரூ.56 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) விலையில் போட்டியாக உள்ளது.

volkswagen golf gti delivery start

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரின் முக்கியமான சிறப்பம்சமே அதன் ஆற்றல்மிக்க என்ஜின் ஆகும். இந்த காரில் பொருத்தப்படும் 2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 265 பிஎஸ் மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய கோல்ஃப் ஜிடிஐ காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 250கிமீ ஆகும். கோல்ஃப் ஜிடிஐ காரின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், துரிதமாக செயல்படக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், முன் சக்கரங்களை எலக்ட்ரானிக் மூலமாக டிஃப்ரென்ஷியல் லாக் செய்யும் வசதி மற்றும் டைனாமிக் சேசிஸ் கண்ட்ரோலை சொல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.52.99 லட்சம் என்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இந்த அளவிற்கு இந்தியாவிலேயே விலையுயர்ந்த ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை தான் ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன் தற்போது வாங்கியுள்ளார். அதிக விலைமிக்க கார் என்பது மட்டுமின்றி, ஹைவேயில் சாலையை கிழித்துக் கொண்டு செல்லவும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ ஏற்ற காராகும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 13, 2025, 23:40 [IST]
English summary
Jaya tv ceo vivek jayaraman takes first delivery of latest volkswagen car golf gti
மேலும்... #volkswagen #golf #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X