ஒவ்வொரு இருக்கையிலும் ஃபேன்.. தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்ட 106பேருந்துகள் டெலிவரி! யார் வாங்கினது தெரிமா?
106 பேருந்துகள் டெலிவரி கொடுக்கப்பட்ட நிகழ்வு இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்ற மிக பெரிய வாகன டெலிவரி நிகழ்வுகளில் இதுவும் ஒன்று ஆகும். ஓர் வாகன உற்பத்தி நிறுவனமே இந்த அளவு பிரமாண்ட எண்ணிக்கையில் பேருந்துகளை டெலிவரி பெற்று இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஜேசிபிஎல் (JCBL), இதுவே 106 பேருந்துகளை டெலிவரி வழங்கிய நிறுவனம் ஆகும். அதை பெற்றது மஹிந்திரா அண்டு மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மூன்று மாத காலத்திற்குள்ளாக இந்த டெலிவரி முழுமையாக முடிக்கப்பட்டு இருக்கின்றது. தன்னுடைய ஊழியர்களின் போக்குவரத்திற்காக இத்தகைய அதிக எண்ணிக்கையில் மஹிந்திரா நிறுவனம் பேருந்துகளை வாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது ஊழியர்களை உற்பத்தி ஆலை அழைத்து வருவது மற்றும் உற்பத்தி ஆலையில் இருந்து அவர்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்வது போன்ற பணிகளுக்காக இந்த அளவு அதிக எண்ணிக்கையில் அது பேருந்துகளை வாங்கி இருக்கின்றது.

இந்த பேருந்துகளில் ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வேலைகள் பல பார்க்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக பாதுகாப்பு அம்சங்கள் ஏகப்பட்டவை இந்த பேருந்துகளில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன், அனைத்து தர விதிகளுக்கு உட்பட்டும் இந்த பேருந்துகளை அவர்கள் தயார் செய்து இருக்கின்றனர்.
மஹிந்திராவின் பேருந்துகளுக்கான சேஸிஸைக் கொண்டே இந்த பேருந்துகள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பேருந்தில் பயணிகளின் வசதியான டிராவல் அனுபவத்திற்காக 17 அங்குல அளவுள்ள மிருதுவான இருக்கையே வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஒவ்வொரு இருக்கைகளுக்கும் தனி மின் விசிறியும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக, டிரைவருக்கான தனி போர்ஷன், வழித் தடத்தை பிரதிபலிக்கும் டிஜிட்டல் எல்இடி திரைகள், யுஎஸ்பி சார்ஜிங் பாயின்ட், டிவி மற்றும் ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த பேருந்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், பயணத்தின்போது மஹிந்திரா நிறுவன ஊழியர்கள் போரடிக்காமல் பொழுதுபோக்கிய வண்ணம் சொகுசாக டிராவல் செய்துக் கொள்ள முடியும்.
இதுமட்டுமல்ல ஏற்கனவே கூறியதைப் போலவ பாதுகாப்பு அம்சங்களை மிக அதிக அளவில் இந்த பேருந்துகளில் வழங்கி இருக்கின்றனர். அந்தவகையில், டோர்களில் சென்சார், அனைத்து சீட்டுகளுக்கும் சீட் பெல்ட், 30 நாட்களுக்கு ரெக்கார்ட் செய்யும் வசதிக் கொண்ட சிசிடிவி கேமிரா, பேனிக் ஸ்விட்ச் மற்றும் வாகனத்தை துருப் பிடிக்காமல் பாதுகாப்பும் பூச்சு உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, தீ விபத்தைக் கண்டறியும் வசதி மற்றும் அலாரம் வசதி உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய பேருந்துகளையே 106 யூனிட்டுகள் வரை மஹிந்திரா நிறுவனத்திற்கு ஜேசிபிஎல் நிறுவனம் தற்போது டெலிவரி வழங்கி இருக்கின்றது. இதிலேயே விரைவில் தன்னுடைய ஊழியர்களை அழைத்து வருதல் மற்றும் டிராப் செய்தல் உள்ளிட்ட பணிகளை மஹிந்திரா நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் பயணிக்க இந்த அளவு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆச்சரியத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. அது தன்னுடைய வாகனங்களை மட்டுமல்ல தன்னுடைய ஊழியர்கள் பயணிக்கும் பேருந்துகளையும் அதிக ஆடம்பர அம்சங்களை தாங்கியதாக தயார் செய்துக் கொண்டிருக்கின்றது பலருக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








