வெறும் 8 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! எல்லாமே நல்லா இருந்து ஏன் சேல்ஸ் டல் ஆச்சு தெரியுமா?
ஜீப் நிறுவனத்தின் சொகுசு எஸ்யூவி காரான கிராண்ட் செரோக்கி கார் சமீபகாலமாக குறைவாகன எண்ணிக்கையிலேயே விற்பனையாகி வருகிறது. கடந்த மே மாத விற்பனை விபரங்களிலும் இந்த காரின் விற்பனை மிக குறைவாக இருப்பதை காண முடிகிறது. இப்படியாக இந்த கார் ஏன் குறைவாக விற்பனையாகிறது? அந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன? கடந்த சில மாதங்களாக எவ்வளவு கார்கள் விற்பனையாகியுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜீப் நிறுவனம் இந்தியாவில் பிரிமியம் மற்றும் சொகுசு கார்களை விற்பனை செய்யும் ஒரு நி?நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது ஃபோர்ட்போலியோவில் பல சிறந்த கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் விற்பனை செய்யும் கார்களிலேயே மக்களின் கவனத்தை ஈர்த்து அதிகம் விற்பனையாகும் கார் என்றால் அது ஜிப் காம்பஸ் கார் தான்.

அதே நேரம் ஜீப் நிறுவனம் அதிக சொகுசான அதே நேரம் விலை உயர்ந்த காராக கிராண்ட் செரோக்கி காரை விற்பனை செய்து வருகிறது.இந்த கார் கடந்த மே மாதம் வெறும் 8 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது கடந்த மாதம் மட்டுமல்ல கடந்த சில மாதங்களாகவே இந்த காரின் விற்பனை மிக மோசமான எண்ணிக்கையில் தான் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் விலை தான்.
ஜீப் நிறுவனம் இந்த கிராண்ட் செரோக்கி காரின் சிக்னேச்சர் எடிசனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ67.50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இ்நத கார் விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் ரூ3 லட்சம் வரையில் இந்த காரின் விலையில் தள்ளுபடிகளையும் அறிவித்திருந்தது. இருந்தாலும் இந்த காரின் விற்பனை அதிகரிக்கவில்லை.

இந்த ஜீப் கிராண்ட் செரோக்கி கார் கடந்த பிப்ரவரி மாதம் 12 கார்களும், மார்ச் மாதம் 8 கார்களும், ஏப்ரல் மாதம் 7 கார்களும், மே மாதம் 8 கார்களும் விற்பனையாகியுளளன. இப்படியாக கடந்த 3மாதமாக இந்த கார் வெறும் ஒற்றை இலக்க அளவிலேயே விற்பனையாகி வருகிறது. வரும் காலங்களில் மேலும் விற்பனை குறையும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த காரில் உள்ள அம்சங்கள் வெகு சிறப்பாக உள்ளன.
ஜீப் கிராண்ட் செரோக்கி காரை பொருத்தவரை ஷார்ப்பான டிசன்கள், ஸ்லிம்மான ஹெட்லைட் மற்றும் டெயில் லைப், முன்பக்கம் 7 ஸ்லாட் கொண்ட கிரிடல் அதன் மத்தியில் ஜீப் லோகோ ஸ்கோயர் வடிவிலான வீல் ஆர்ச்கள், பாடி கிளாடிங், 20 இன்ச் மெட்டாலிக் அலாய் வீல்கள், வழங்கப்பட்டுள்ளன. இது இந்த காருக்கு ஒரு போல்டான லுக்கை வழங்குகிறது.பின்பக்கம் ஸ்லிம்மான எல்இடி டெயில் லைட் மற்றும் பின்பக்க விண்ட் ஸ்கிரீன் குரோம் பட்டை சரவுண்ட் உடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 270 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கெண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 215 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 533 மிமீ தண்ணீரில் மூழ்கி சென்றாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4 விதமான கார் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தனி மவுசு இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்ளறனர். இந்நிலையில் இந்த காரின் விலை மிக அதிகமாக இருப்பதால் விற்பனை குறைவாக இருக்கிறது. இந்த கார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்து தரப்படுவதால் இந்த அதிக விலை இருக்கிறது. இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் விலை குறைய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









