ரூ4.8 லட்சம் மிச்சமாகும்! இந்த கம்பெனி காரை இனி வாங்க கூட்டம் ஈ மாதிரி மொய்க்கப்போகுது!

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வரவுள்ள நிலையில் ஜீப் நிறுவனம் தனது வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. மற்ற நிறுவனங்களை போல ஜீப் நிறுவனமும் இந்த முடிவை அறிவித்து தற்போது இந்த வாகனங்களுக்கான விலை விபரங்களை வெளியிட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

செப்22ம் தேதி முதல் மத்திய அரசு குறைக்கப்பட்ட வரி முறைகளை அமலுக்கு கொண்டு வருகிறது. இந்தியாவில் இனி வாகனங்கள் 18 சதவீத விலையில் விற்பனையாகும். சொகுசு வாகனங்கள் எல்லாம் 40 சதவீத வரியில் விற்பனை செய்யப்படும். இதற்கு முன்னர் சொகுசு வாகனங்களுக்க 40 சதவீத்திற்கும் அதிகமான விலையில் வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Jeep GST CUT

இந்நிலையில் இது 40 சதவீதமாக குறைந்துள்ளதால் வாகனங்களின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளது. ஜீப் நிறுவனம் தற்போது இந்தியாவில் காம்பஸ், மெரிடியன், விராங்கிளர், கிராண்ட் செரோக்கி ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் விராங்கிளர் காருக்கு தான் அதிகபட்ச விலை குறைப்பு வந்துள்ளது. இந்த காரின் விலை ரூ4.84 லட்சம் குறைந்துள்ளது.

ஜிப் நிறுவனத்தின் காம்பஸ் காரின் விலை ரூ2.16 லட்சம் வரையிலும், ஜீப் மெரிடியன் காரின் விலை ரூ2.47 லட்சம் வரையிலும், ஜீப் விராங்கிளர் காரின் விலை ரூ4.84 லட்சம் வரையிலும், ஜீப் கிராண்ட் செரோக்கி காரின் விலை ரூ4.50 லட்சம் வரையிலும் விலை குறைவாக விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் எல்லாம் தற்போது உள்ள எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து குறைக்கப்படும்.

Jeep GST CUT

வழக்கமாக ஒரு நிறுவனத்தின் பிளாக்ஷிப் காருக்கு தான் அதிக தள்ளுபடி கிடைக்கும். அதாவது அந்த கார் தான் அதிக விலையில் விற்பனையாகி வந்திருக்கும். அதனால் தள்ளுபடி என வரும் போது அந்த காருக்கு அதிக தள்ளுபடி என்ற கணக்கு வரும். ஆனால் ஜீப் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் காரான கிராண்ட் செரோக்கி காரை விட ஜீப் விராங்கிளர் காருக்கு தான் அதிக விலை குறைப்பு வந்துள்ளது. இது தற்போது விதிக்கப்படும் செஸ் வரியால் ஏற்பட்ட விளைவாகும்.

மாடல் எவ்வளவு விலை குறையும்
காம்பஸ் ரூ 2.16 லட்சம்
மெரிடியன் ரூ 2.47 லட்சம்
விராங்கிளர் ரூ 4.84 லட்சம்
கிராண்ட் செரோக்கி ரூ 4.50 லட்சம்

ஜீப் செரோக்கி காரை விட ஜீப் விராங்கிளர் காருக்கு அதிக செஸ் வரி விதிக்கப்பட்டிருந்தததால் இந்த வரி குறைப்பு நிகழ்ந்துள்ளது. எது எப்படியோ ஜீப் நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகாரப்பூர்வமாகவே குறைந்துவிட்டது. இதனால் வரும் செப் 22ம் தேதிக்கு பிறகு இந்நிறுவனத்தின் வாகன விற்பனை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கலாம்.

Jeep GST CUT

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. இதனால் இந்த காலகட்டத்தில் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் ஜீப் நிறுவன வாகனங்கள் அதிக விலையில் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது அதன் விலை குறைந்துள்ளது. இது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக வரி குறைப்பு பலன்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஜீப் நிறுவனத்தின் வாகனம் இனி விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 10, 2025, 7:00 [IST]
English summary
Jeep gst cut prices slashed up to rs 4 8 lakh gst 2 0 reform
மேலும்... #jeep #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X