30 நாளில் 300 காரை கூட விற்க முடியாமல் திண்டாடுவது இந்த கம்பெனியா? ரொம்ப பிரபலமான கம்பெனியாச்சே!
இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சிறப்பான விற்பனையைபெற்று வரும் நிலையில் சில நிறுவனங்கள் தற்போது விற்பனையில் தள்ளாடி வருகிறது.இப்படியாக ஜீப் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் 300 வாடிக்கையாளர்களை கூட பெற முடியாமல் திண்டாடியுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. மாதமானால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் லட்சகணக்கில் தங்கள் வாகன விற்பனை விபரங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜீப் நிறுவனமும் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஆனால் கடந்த நவம்பர் மாதம் ஜீப் நிறுவனத்திற்கு அவ்வளவு நல்ல மாதமாக அமையவில்லை. இந்நிறுவமன் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் மொத்தமோ 253 கார்களை தான் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் 4 மாடல் கார்களை விற்பனை செய்தாலும் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் இல்லை.
கடந்த நவம்பர் மாதம் 157 ஜீப் காம்பஸ் கார், 63 ஜீப் மெரிடியன் கார், 19 ஜீப் விராங்கிளர் கார், 14 ஜீப் கிராண்ட் செரோக்கி ஆகிய கார்கள் விற்பனையாகியுள்ளது.இதை பார்க்கும் போது ஜீப் காம்பஸ் கார் தான் சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கிறது. இந்த 4 மாடல் கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த கார்கள் எல்லாமே எஸ்யூவி ரக கார்கள் தான். இந்தியாவில் எஸ்யூவி ரக கார்கள் சிறப்பாக விற்பனையாகி வந்தாலும் இந்த கார்களின் விற்பனை பெரிய அளவில் இல்லை. நவம்பர் மாதம் முழுவதும் சேர்த்தால் 300 கார்கள் கூட விற்பனையாகவில்லை. ஆனால் இந்த கார்கள் விற்பனையாகும் அதே செக்மெண்டில் டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கார்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிறுவனம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 361 கார்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும் போது 29.9 சதவீதம் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. அதே நேரம் கடந்த அக்டோபர் மாதம் 329 கார்களைவிற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும் போதும் நவம்பர் மாதம் 23.1 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது.

இந்த குறைவான விற்பனை நவம்பர் மாத்தில் மட்டும் பதிவாகவில்லை கடந்த 6 மாத டிரெண்ட் இப்படி தான் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 262 கார்களும், ஜூலையில் 251 கார்களும், ஆகஸ்ட் மாதம் 210 கார்களும், செப்டம்பர் மாதம் 300 கார்களும், அக்டோபர் மாதம் 329 கார்களும், நவம்பர் மாதம் 253 கார்களும் விற்பனையாகியுள்ளன. அதனால்கடந்த நவம்பர் மாதம் தான் குறைவான விற்பனை என நினைக்கவேண்டாம். இதற்கு முன்னரும் இந்த நிறுவனம் இதை விட குறைவான கார்களை எல்லாம் விற்பனைசெய்துள்ளது. இந்நிறுவனம் தனது திட்டத்தை மாற்றினால் மட்டுமே இந்தியாவில் அதிக விற்பனையை பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜீப் நிறுவன ம் இந்தியாவல் நீண்ட காலமாக வாகனங்களை விற்பனை செய்து வந்தாலும் இந்த செக்மெண்டில் விற்பனையாகும் போட்டி நிறுவன தயாரிப்புகள் விலை குறைவாக உள்ளது. மேலும் ஜீப் நிறுவனத்திடம் வெறும் 4 மாடல்கள்தான் உள்ளது என்பதால் விற்பனை மந்தாக உள்ளது. இதை சரி செய்தால் விற்பனை அதிகமாகும்.


Click it and Unblock the Notifications









