இது யாரோட நிறுவனம்னு தெரிஞ்சுதான் குவியுறாங்களா!.. இந்தியர்கள் டாடா நிறுவனத்தை ஒதுக்க ஆரம்பிச்சுட்டாங்களோ!
இங்கிலாந்து நாட்டு நிறுவனமாக பிறந்து, சீன நிறுவனமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் ஓர் நிறுவனமே எம்ஜி மோட்டார் (MG Motor). இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ (JSW) உடன் இணைந்து இந்த நிறுவனம் தற்போது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) என்கிற பெயரில் செயல்பட்டு வருகின்றது. மாருதி (Maruti)-யும், சுஸுகி (Suzuki)-யும் இணைந்து செயல்பட்டு வருவதை போலவே இவர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கே இந்தியாவில் தற்போது மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் 2025 பிப்ரவரி மாத விற்பனைப் புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதத்தில் மட்டும் 4,002 யூனிட்டுகளை ஹோல்சேலில் எம்ஜி நிறுவனம் விற்பனைச் செய்து இருக்கின்றது. இவை அனைத்தும் பிப்ரவரி மாதத்தின் 28 நாட்களில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டவை ஆகும்.

இதில் ஐசிஇ (ICE) வாகனங்களைக் காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனம் (EV)களே மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இந்த மொத்த யூனிட்டில் 78 சதவீதம் மின்சார வாகனங்களே விற்பனையாகி உள்ளன. அதிலும், நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலான விண்ட்ஸர் இவி (Windsor EV)-க்கே மிக சிறப்பான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த கார் மாடலே டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் மின்சார கார் பிரிவிற்கு தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 2025 பிப்ரவரி மாதத்திலும் டாடாவின் மின்சார கார்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கே இந்த விண்ட்ஸர் இவி விற்பனையாகி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதனால், டாடாவின் மின்சார கார்களை இந்தியர்கள் ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்களோ என்கிற கேள்வி நம் மத்தியில் எழும்பியிருக்கின்றது. சமீபத்தியிலேயே விண்ட்ஸர் இவி 15 ஆயிரம் யூனிட் விற்பனை எனும் மாபெரும் விற்பனை சாதனையை இந்தியாவில் படைத்தது. விற்பனைக்கு வந்த சில மாதங்களே ஆகின்ற நிலையில் இந்த மாபெரும் மைல்கல்லை அது எட்டியிருக்கிந்றது.
துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்திலேயே இந்த காரை இந்தியாவில் எம்ஜி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுவே தற்போது இந்தியர்களின் மனம் கவர்ந்த எலெக்ட்ரிக் காராக அக்டோபர் தொடங்கி இப்போது வரை உள்ளது. இத்தகைய அமோக வரவேற்பைக் காரணம் காட்டி இந்த காரின் உற்பத்தியை இரட்டிப்பாக்க திட்டமிட்டு இருக்கின்றது, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார்.
இதற்காக நிறுவனத்தின் ஹலோல் உற்பத்தி ஆலையில் அந்நிறுவனம் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த காருக்காக மட்டுமல்ல விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எம்ஜி எம்9 மற்றும் சைபர்ஸ்டர் ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்காகவும் ஆலையில் மாற்றத்தை செய்ய இருக்கின்றது எம்ஜி நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அதீத வரவேற்பு நம் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. குறிப்பாக, 'இது யாரோட நிறுவனம்னு தெரிஞ்சுதான் மக்கள் குவியுறாங்களா?', என்கிற மிகப் பெரிய அளவில் எழும்பியிருக்கின்றது. ஏனெனில் இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சீன நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே டிக் டாக், ஹீலோ போன்ற செல்போன் செயலிகளுக்குகூட தடை விதிக்கப்பட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே சீன நிறுவனத்திற்கு சொந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி பல்வேறு கேள்விகளை நம் மத்தியில் எழுப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications








