75 லட்ச ரூபாய்க்கு விற்றாலும் வாங்குறதுக்கு ஆள் இருக்கா? 2 மாதங்களில் கஸ்டமர்களை அள்ளிய எலெக்ட்ரிக் கார்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் (Luxury Electric Cars) விற்பனையில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பிராண்டாக உயர்ந்துள்ளது. இது எம்ஜி சைபர்ஸ்டர் (Cyberster) மற்றும் எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் (M9 Presidential Limousine) ஆகிய இரண்டு கார்களின் வெற்றியால் சாத்தியமான ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.

இந்த இரண்டு கார்களுக்கும் சந்தையில் சிறப்பான வரவேற்பும், பெரும் தேவையும் உள்ளது. இதன் காரணமாக, இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு 3- 4 மாதங்கள் காத்திருப்பு காலம் இருப்பதாக கூறும் எம்ஜி நிறுவனம், உலகின் வேகமான எம்ஜி கார் ஆன சைபர்ஸ்டர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் காராக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

jsw mg motor as india s largest luxury electric car brand

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025 ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், எம்ஜி நிறுவனத்தின் சொகுசு சில்லறை விற்பனை ஷோரூம்களான எம்ஜி செலக்ட் (MG SELECT) மூலம் இதுவரையில் மட்டுமே சுமார் 256 சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இந்த வளர்ச்சி குறித்து, எம்ஜி செலக்ட் ஷோரூம்களுக்கான இடைக்காலத் தலைவர் மிலிந்த் ஷா கருத்துத் தெரிவிக்கையில், "இந்தியாவின் சொகுசு எலக்ட்ரிக் கார்கள் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, எங்கள் கார்களுக்குக் கிடைத்த அற்புதமான வரவேற்புக்கு ஒரு சான்றாகும். எம்ஜி சைபர்ஸ்டரின் செயல்திறன் அல்லது எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசினின் இணையற்ற சொகுசான பயணத்தை அனுபவிக்க விரும்பும் தனித்துவமான வாடிக்கையாளர்களை இந்த இரண்டு கார்களும் ஈர்க்கின்றன.

jsw mg motor as india s largest luxury electric car brand

இந்த பிரத்யேக உரிமையாளர் அனுபவத்தை உருவாக்குவதில் எம்ஜி செலக்ட் பெருமை கொள்கிறது" என்று குறிப்பிட்டார். எம்ஜிபி ரோட்ஸ்டர் (MGB Roadster) என்ற உலக புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் காரின் மரபின் அடிப்படையில் உருவான எம்ஜி சைபர்ஸ்டர், சக்திவாய்ந்த மற்றும் செயல்திறன் மிக்க, எதிர்காலத்திற்கான ரோட்ஸ்டர் ரக எலெக்ட்ரிக் கார் ஆகும்.

ஸ்போர்ட்ஸ் கார் ஆர்வலர்களுக்காக இதன் வடிவமைப்பு ஆனது கத்தரிக்கோல் கதவுகள், மென்மையான மேற்கூரை மற்றும் ஈர்க்கக்கூடிய இழுவை குணகம் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது. இதன் மூலமாக, சைபர்ஸ்டர் காரின் தோற்றம் கிளாசிக்கான ஸ்டைலையும், நவீன கண்டுபிடிப்பையும் ஒன்றிணைத்ததாக உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் இரட்டை மோட்டார் செட்-அப் ஆனது அதிகப்பட்சமாக 510 PS சக்தியையும், 725 Nm டார்க்கையும் வழங்கக்கூடியதாக உள்ளது.

jsw mg motor as india s largest luxury electric car brand

இந்த எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது காரின் அனைத்து சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் ஆற்றலை வழங்குகிறது. இதன் மூலம், சைபர்ஸ்டர் வெறும் 3.2 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை எட்டக்கூடியதாக உள்ளது. இதன் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களாக கூர்மையான டிஆர்எல்கள் மற்றும் பிரெம்போ 4-பிஸ்டன் முன் பிரேக் காலிபர்களை சொல்லலாம்.

பிரெம்போ பிரேக் காலிபர்கள் 100 கிமீ/மணி வேகத்திலிருந்து காரை வெறும் 33 மீட்டரில் நிறுத்தக்கூடிய நம்பிக்கையான பிரேக்கிங் திறனை வழங்குகின்றன. இதன் 20 அங்குல அலாய் சக்கரங்கள், பிரெஞ்சு P-ஜீரோ டயர்களுடன் இணைந்து, சிறந்த பிடிமானத்தையும் செயல்திறனையும் உறுதி செய்கின்றன. இவை எல்லாவற்றையும் விட, சைபர்ஸ்டர் காரின் பின்பகுதி 'கம்பேக்' (Kammback) என்கிற வித்தியாசமான டிசைனில் வடிவமைக்கப்படுகிறது.

jsw mg motor as india s largest luxury electric car brand

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் JSW எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 14 எம்ஜி செலக்ட் ஷோரூம் மையங்களைத் திறந்துள்ளது. இந்த எம்ஜி செலக்ட் ஷோரூம் மையங்கள் விலையுயர்ந்த எம்ஜி கார்களை விற்பனை செய்வதுடன், ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் என தனித்துவமான சேவைகள், புதிய தலைமுறை கஸ்டமர்களுக்கான சொகுசான, புதுமையான மற்றும் நிலைத்தன்மை கொண்ட புகழ்பெற்ற தயாரிப்புகளை வழங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் வேகமான எம்ஜி கார் ஆன எம்ஜி சைபர்ஸ்டர் மற்றும் பிரசிடென்ஷியல் லிமோசின் ஆன எம்ஜி எம்9 ஆகிய இரண்டும் பல வெளிநாடுகளில் புகழ்பெற்ற தயாரிப்புகள் ஆகும். இருப்பினும், இவற்றிற்கு இந்தியாவிலும் சிறப்பான வரவேற்பு கிடைப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இந்தியாவில் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு பெரிய அளவிற்கு இன்னும் மார்க்கெட் வளரவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, October 10, 2025, 21:04 [IST]
English summary
Jsw mg motor become indias second largest luxury electric car brand check all details here
மேலும்... #mg motor #electric car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X