100 வருஷமா செயல்பட்டாலும் இப்பவும் மாதம் 5,000 கார்களை விற்கும் கார் கம்பெனி! பின்னால் சீனாவின் SAIC

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் கார்கள் விற்பனையில் மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்துக்கு அடுத்து 2வது இடத்தை பிடிக்கும் அளவிற்கு எம்ஜி மோட்டார் முன்னேறி உள்ளது. இதனை வெளிக்காட்டும் விதமாக, கடந்த நவம்பர் மாதத்தில் இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.

2025 நவம்பர் மாதத்தில் மட்டும் 5,754 கார்களை ஜேஎஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் எம்ஜி தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பை இது காட்டுகிறது. மேலும், 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தை எடுத்து பார்த்தாலும், எம்ஜி கார்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது என்பதை பார்க்க முடிகிறது.

jsw mg motor india november car sales

ஏனெனில், கடந்த 11 மாதங்களில் எம்ஜி விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை ஆனது கடந்த 2024ஆம் ஆண்டின் இதே முதல் 11 மாதங்களை விட சுமார் 32% அதிகம் ஆகும். அதாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் எம்ஜி கார்களின் விற்பனை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு, உள் எரிப்பு எஞ்சின் (ICE) மற்றும் எலக்ட்ரிக் வாகன (EV) மாடல்களுக்கான நிலையான தேவை முக்கியக் காரணம் என்று ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் 'எம்ஜி செலக்ட்' (MG SELECT) ஆடம்பர சில்லறைப் பிரிவின் செயல்பாடு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

jsw mg motor india november car sales

விலையுயர்ந்த எம்ஜி கார்களை விற்பனை செய்வதற்காக திறக்கப்பட்ட எம்ஜி செலக்ட் ஷோரூம்கள் தொடங்கப்பட்டதில் இருந்து 1,000 கார்கள் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளதுடன், இந்தியாவின் ஆடம்பர எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. எம்ஜி செலக்ட் வரிசையில் எம்9 பிரெசிடென்ஷியல் லிமோசின் (M9 Presidential Limousine) மற்றும் சைபர்ஸ்டர் (Cyberster) ஆகிய இரு விலையுயர்ந்த எம்ஜி கார்கள் தற்சமயம் உள்ளன.

இதில், சைபர்ஸ்டர் காரை இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் என எம்ஜி நிறுவனம் பெருமையுடன் கூறுகிறது. மேலும், பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி உருவாக்கிய கார்களிலேயே அதிவேகத்தில் இயங்கக்கூடிய கார் இது ஆகும். இந்த காரின் அதிக தேவை காரணமாக, வாடிக்கையாளர்கள் புக் செய்த பின் டெலிவிரிக்காக நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

jsw mg motor india november car sales

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா என்பது 2023ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் இடம்பெற்ற, 100 நாடுகளுக்கு மேல் வணிகம் செய்யும் சீனாவின் SAIC மோட்டார் நிறுவனமும், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜேஎஸ்டபிள்யூ குழுமமும் இணைந்து இந்த கூட்டணி நிறுவனத்தை நடத்தி வருகின்றன.

மேம்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வாகனங்களை உருவாக்குவதே இவர்களின் நோக்கம். ஆனால், எம்ஜி மோட்டார் நிறுவனம் தோன்றியது பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தில் ஆகும். 1924இல் இங்கிலாந்தில் நிறுவப்பட்ட மோரிஸ் காரேஜஸ் (MG) நிறுவனம், குஜராத்தின் ஹலோலில் ஒரு உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது. இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 100,000 கார்களுக்கும் அதிகமாகும்.

jsw mg motor india november car sales

மேலும், இது நேரடியாகவும் மறைமுகமாகவும் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவில் தற்சமயம் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரில் இருந்து ஹெக்டர் (Hector), இசட்.எஸ் இவி (ZS EV), க்ளோஸ்டர் (Gloster), அஸ்டர் (Astor), கோமட் இவி (Comet EV) மற்றும் வின்ட்சர் இவி (Windsor EV) போன்ற பலதரப்பட்ட கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் சிறியதான மற்றும் பலத்தரப்பட்ட மக்களால் வாங்கக்கூடிய விலையில் காம்பாக்ட் கார்கள் முதல் பிரீமியம் எஸ்யூவி கார்கள் வரை பல்வேறு பிரிவுகளில் கார்களை விற்பனை செய்வதுதான் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதன்மையான பலம் ஆகும். அத்துடன், சமீப காலமாக எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்திலும் இந்த நிறுவனம் தீவிரம் காட்டி வருவது இந்த நிறுவனத்தின் விற்பனையில் நேரடியாக முன்னேற்றத்தை கொண்டுவர ஆரம்பித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 2, 2025, 16:59 [IST]
English summary
Jsw mg motor india achieved 32 percent year to date growth check all details here
மேலும்... #mg motor #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X