இந்திய மிடில்-கிளாஸ் மக்கள் அதிகம் வாங்கும் எம்ஜி கார்! சேல்ஸ் நம்பர் எல்லாத்தையும் சொல்லுது!
எம்ஜி மோட்டார் (MG Motor), கடந்த 1 வருடத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ள நிறுவனம். குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் எம்ஜி மோட்டார் சமீப மாதங்களில் பெரிய அளவில் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் எம்ஜி கூட்டணி சேர்ந்தது ஆகும்.
ஏனெனில், இந்த கூட்டணிக்கு பிறகே எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் எம்ஜி நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்தது. குறிப்பாக, சந்தையில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் விண்ட்சர் இவி (Windsor EV) என்கிற எலக்ட்ரிக் கார் இந்த கூட்டணிக்கு பிறகே BaaS திட்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது.

எலக்ட்ரிக் காருக்கான பேட்டரியை குத்தகை முறையில் வழங்கும் இந்த BaaS திட்டமானது எம்ஜி மோட்டாரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகும். மற்ற நிறுவனங்களும் இதை பின்பற்ற ஆரம்பித்து இருப்பது, இந்த திட்டத்தின் வெற்றியாகும். அதேபோல், இந்த திட்டத்தை மற்ற எலக்ட்ரிக் கார்களுக்கும் பின்பற்ற ஆரம்பித்துள்ள எம்ஜி மோட்டார் கடந்த ஜூன் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களையே விற்பனை செய்துள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 829 கார்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் எம்ஜி விற்பனை செய்திருந்த கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 644 ஆகும். இந்த வகையில் பார்த்தால், எம்ஜி கார்களின் விற்பனை ஆனது 26% அதிகரித்து உள்ளது.

இந்த வளர்ச்சிக்கு காரணம், எம்ஜியின் எலக்ட்ரிக் கார்கள் ஆகும். ஏனெனில், கடந்த மாதத்தில் எம்ஜி விற்பனை செய்த 5,829 கார்களில் ஏறக்குறைய 85% கார்கள் எலக்ட்ரிக் கார்களாகும். இன்னும் சொல்லப்போனால், எம்ஜி நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்த கார், விண்ட்சர் இவி என்கிற எலக்ட்ரிக் கார் ஆகும்.
கடந்த மாதத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 799 விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 ஜூன் மாதத்தின்போது விண்ட்சர் இவி விற்பனையில் இல்லை. விண்ட்சர் இவி-க்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி கார், கோமெட் இவி என்கிற மற்றொரு எம்ஜி எலக்ட்ரிக் கார் ஆகும்.

இருப்பினும், 2024 ஜூனில் 1,300 கோமெட் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூனில் 856 கோமெட் இவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில், இந்தியாவில் எம்ஜி மோட்டார் அறிமுகம் செய்த முதல் காரான ஹெக்டர் (Hector) 757 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஜூன் மாதத்தில் இவை மட்டுமின்றி, 317 இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் கார்கள், 34 க்ளோஸ்டர் கார்கள், 66 அஸ்டர் கார்களையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்துடனான கூட்டணி இந்தியாவில் எம்ஜி நிறுவனத்துக்கு மிக பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
Source: Gaadiwaadi (https://gaadiwaadi.com/)


Click it and Unblock the Notifications









