சீன கம்பெனினு யாரும் சொல்றது இல்ல... கார் கஸ்டமர்ஸ் கூடிட்டே போறாங்க!! செப்டம்பர் சேல்ஸ் ரிப்போர்ட்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், நடந்து முடிந்த கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. எம்ஜி எலக்ட்ரிக் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி (GST) திருத்தங்களுக்கு மத்தியில் வெளிவந்துள்ளதால் இந்த விற்பனை புள்ளி விபரங்கள் கவனத்தை பெற்றுள்ளன.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 6 ஆயிரத்து 728 கார்களை எம்ஜி விற்பனை செய்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 2024-ல் விற்பனை செய்யப்பட்ட 5 ஆயிரத்து 21 கார்களுடன் ஒப்பிடும்போது, ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 34% வளர்ச்சியை எம்ஜி இந்தியாவில் பதிவு செய்துள்ளது.

mg cars sales report of september 2025

ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் நவராத்திரி (Navratri) பண்டிகைக் காலம் ஆகியவை கார் வாங்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து, விற்பனைக்கு ஊக்கமளித்துள்ளன. எம்ஜியின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு பெட்ரோல்/ டீசல் (ICE) மற்றும் மின்சார வாகனங்கள் (EV) ஆகிய இரண்டும் பங்களித்துள்ளன.

சமீபத்திய ஜிஎஸ்டி குறைப்பு, எம்ஜி-யின் பெட்ரோல் வாகனங்களான அஸ்டர் (Astor), ஹெக்டர் (Hector) மற்றும் கிளோஸ்டர் (Gloster) போன்ற கார்களில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.54,000 முதல் ரூ.3,50,000 வரை சலுகைகளை வழங்கியுள்ளது. எம்ஜி செலக்ட் (MG Select) என்ற சொகுசு சில்லறை விற்பனை ஷோரூம்கள் மூலம், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா, இந்தியாவில் சொகுசு எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் இரண்டாவது பெரிய பிராண்டாக உயர்ந்துள்ளது.

mg cars sales report of september 2025

உலகின் அதிவேக எம்ஜி காரான எம்ஜி சைபர்ஸ்டர் (Cyberster) மற்றும் எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் (M9 Presidential Limousine) போன்ற விலையுயர்ந்த கார்கள் எம்ஜியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்கள் ஆகும். ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஆனது சீனாவின் SAIC மோட்டார் மற்றும் இந்தியாவின் JSW குழுமம் இணைந்து 2023-ல் உருவாக்கிய ஒரு கூட்டணி நிறுவனமாகும்.

இந்த கூட்டணி, ஸ்மார்ட்டான மற்றும் நிலையான வாகன சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால தயாரிப்புகளை சிறந்த மதிப்பில் வழங்கும் பல்வேறு வாகனங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதிலும், உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதிலும், அதன் வணிகச் செயல்பாடுகள் அனைத்திலும் சிறந்த கண்டுபிடிப்புகளைக் கொண்டுவருவதிலும் உறுதியாக உள்ளது.

mg cars sales report of september 2025

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான மோரிஸ் கேரேஜஸ் (Morris Garages - MG) 1924ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. ஸ்போர்ட்ஸ் கார்கள், ரோட்ஸ்டர்கள் மற்றும் கன்வெர்ட்டிபிள் ரக வாகனங்களுக்காக உலக அளவில் புகழ்பெற்றது. பிரிட்டிஷ் பிரதமர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் உட்பட பிரபலங்கள் பலரும் எம்ஜி கார்களின் ஸ்டைல், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வேகமான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் அபிங்டனில் 1930 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம்ஜி கார் கிளப், இன்றும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கார் பிராண்ட் கிளப்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் எம்ஜி நிறுவனம் நவீன, எதிர்கால மற்றும் புதுமையான பிராண்டாக வளர்ச்சி அடைந்துள்ளது. குஜராத்தின் ஹலோலில் அமைந்துள்ள அதிநவீன உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் திறன் எம்ஜி நிறுவனத்திற்கு உள்ளது.

mg cars sales report of september 2025

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் உள்ளூர்மயமாக்கல் மூலம் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஆனால், இதற்கு எல்லாம் இந்த நிறுவனத்திற்கு ஊக்கம் தர வேண்டும் எனில், அதற்கு இந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாக வேண்டும். கடந்த செப்டம்பர் மாத விற்பனை நிலவரத்தை பார்க்கும்போது தனது வழியில் எம்ஜி சரியாக செல்வது போலவே தோன்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 1, 2025, 16:08 [IST]
English summary
Jsw mg motor india cars sales report of september 2025 check all details here
மேலும்... #mg motor #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X