பெட்ரோல், டீசல் கார்களை வாங்க யாரும் ஷோரூம் வர மாட்றாங்க! எம்ஜியில் கஸ்டமர்ஸை கவரும் ஒரேயொரு எலெக்ட்ரிக் கார்
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் தனது 2025 நவம்பர் மாத விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், எலெக்ட்ரிக் எம்ஜி காரான வின்ட்சர் இவி (Windsor EV) சிறப்பான விற்பனையுடன் முன்னணியில் உள்ளது. கடந்த மாதத்தில் 4,025 யூனிட்கள் விற்பனையாகி, எம்ஜி நிறுவனத்தின் மொத்த மாத விற்பனையில் சுமார் 70% பங்களிப்பை வின்ட்சர் இவி பெற்றுள்ளது.
அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 3,144 வின்ட்சர் இவி கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இது ஆண்டுக்கு ஆண்டு 28% வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024 அக்டோபர் மாதத்தில் உற்பத்தி தொடங்கப்பட்ட 400 நாட்களுக்குள் 50,000 யூனிட்டுகளுக்கும் அதிகமான விற்பனை என்ற மைல்கல்லை வின்ட்சர் இவி எட்டியுள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் வேகமாக இந்த சாதனையை நிகழ்த்திய எலெக்ட்ரிக் கார் என்கிற பெயரை விண்ட்சர் இவி பெற்றுள்ளது. எனினும், முந்தைய 2025 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 9% சரிந்துள்ளது. விண்ட்சர் இவி மட்டுமே தற்போதைக்கு சிறப்பாக விற்பனையாகும் ஒரே எம்ஜி காராக உள்ளது. அதாவது, பெட்ரோல்/ டீசல் எம்ஜி கார்கள் கூட இல்லை.
விண்ட்சர் இவி-க்கு அடுத்து எம்ஜி கோமட் இவி (Comet EV) 897 யூனிட்கள் விற்பனை உடன் 2024 நவம்பரை விட 50% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது (2024 நவம்பரில் 600 யூனிட்கள்). இருந்தபோதிலும், அதன் 2025 அக்டோபர் மாத விற்பனை உடன் ஒப்பிடுகையில் 11% குறைந்துள்ளது. இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள எம்ஜி இசட்.எஸ் இவி (ZS EV) எலெக்ட்ரிக் காரின் தேவை சற்று குறைந்து, கடந்த நவம்பரில் 400 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 17% சரிவு மற்றும் முந்தைய அக்டோபர் மாதத்தை விட 34% குறைவு ஆகும். எம்ஜி ஹெக்டர் (Hector) மற்றும் ஹெக்டர் பிளஸ் (Plus) கார்களின் விற்பனை 278 யூனிட்டுகளாக 2024 நவம்பரை விட 75% சரிவைச் சந்தித்துள்ளன. எனினும், 2025 அக்டோபரில் விற்பனையான 225 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் 24% வளர்ச்சி ஹெக்டர் கார்களின் விற்பனையில் ஒரு சிறிய மீட்சியைக் காட்டுகிறது.
எம்ஜி அஸ்டர் (Astor) விற்பனையும் 73% சரிந்து 149 யூனிட்டுகளாக கடந்த மாதத்தில் பதிவாகி உள்ளது. ஆனால் கடந்த அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் விற்பனை 46% அதிகரித்துள்ளது (அக்டோபர் 2025-ல் 102 யூனிட்டுகள்). எம்ஜியின் உயர்நிலை காரான குளோஸ்டர் (Gloster) தொடர்ந்து விற்பனை தேக்கத்தைச் சந்தித்து, நவம்பரில் வெறும் 5 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது (கடந்த ஆண்டு நவம்பரில் 138 யூனிட்கள்).
| No | MG Car Sales | Nov-25 | Nov-24 | Diff | Growth % YoY | % Share Nov 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Windsor | 4,025 | 3,144 | 881 | 28.02 | 69.95 |
| 2 | Comet | 897 | 600 | 297 | 49.50 | 15.59 |
| 3 | ZS EV | 400 | 483 | -83 | -17.18 | 6.95 |
| 4 | Hector | 278 | 1,106 | -828 | -74.86 | 4.83 |
| 5 | Astor | 149 | 548 | -399 | -72.81 | 2.59 |
| 6 | Gloster | 5 | 138 | -133 | -96.38 | 0.09 |
| - | Total | 5,754 | 6,019 | -265 | -4.40 | 100.00 |
| No | MG Car Sales | Oct-25 | Oct-25 | Diff | Growth % MoM | % Share Oct 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Windsor | 4,025 | 4,445 | -420 | -9.45 | 69.49 |
| 2 | Comet | 897 | 1,007 | -110 | -10.92 | 15.74 |
| 3 | ZS EV | 400 | 609 | -209 | -34.32 | 9.52 |
| 4 | Hector | 278 | 225 | 53 | 23.56 | 3.52 |
| 5 | Astor | 149 | 102 | 47 | 46.08 | 1.59 |
| 6 | Gloster | 5 | 9 | -4 | -44.44 | 0.14 |
| - | Total | 5,754 | 6,397 | -643 | -10.05 | 100.00 |
2025 அக்டோபர் உடன் ஒப்பிடுகையிலும் இதன் விற்பனை 44% சரிந்து, அளவில் பெரியதான எஸ்யூவி கார்கள் பிரிவில் பலவீனமான தேவையைக் காட்டுகிறது. எம்ஜி நிறுவனம் தனது வரவிருக்கும் முதன்மை எரிபொருள் என்ஜின் எஸ்யூவி கார் ஆன எம்ஜி மெஜிஸ்டர்-ஐ அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது சோதனை ஓட்டத்தில் பலமுறை காணப்பட்டது. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை எம்ஜி இதுவரை அறிவிக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை இவ்வாறு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், 2026 ஜனவரி 1 முதல் தனது அனைத்து கார் மாடல்களின் விலைகளையும் 2% வரை உயர்த்த போவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார காரணங்களைச் சமாளிக்க இந்த விலை உயர்வு அத்தியாவசியம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது கார் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து மாறுபடும். சமீபத்தில் ரூ.11.99 லட்சம் என்ற கவர்ச்சிகரமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹெக்டர், வரும் மாதங்களில் அதன் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









