இந்த ஒரு கார் மட்டும் இல்லைனா... இந்தியாவில் எம்ஜி பிராண்டை தூக்கி பிடிக்கும் 5-இருக்கை எலெக்ட்ரிக் கார்!

2025 அக்டோபர் மாதத்தின் கார்கள் விற்பனைப் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ள ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், அதிர்ச்சியளிக்கும் விதமாக 2024 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும், 2025 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் சரிவுகளை சந்தித்துள்ளது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் கடந்த மாதத்தில் 6,397 கார்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது 2024 அக்டோபரில் விற்கப்பட்ட 7,045 எம்ஜி கார்களுடன் ஒப்பிடும்போது 9% சரிவாகும். அதேபோல், 2025 செப்டம்பரில் விற்கப்பட்ட 6,728 எம்ஜி கார்களுடன் ஒப்பிடும்போதும் 5% குறைந்துள்ளது. இந்தச் சரிவுக்கு மத்தியிலும், புதிய வின்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

jsw mg motor india sales report of october 2025

எம்ஜி நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் முன்னிலை வகித்ததுடன், இந்தியாவில் 1 லட்சம் இவி உரிமையாளர்கள் என்ற மைல்கல்லை எட்டவும் எம்ஜி நிறுவனத்துக்கு விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார் முக்கிய பங்காற்றி வருகிறது. விண்ட்சர் இவி 4,445 யூனிட்கள் விற்பனையாகி கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான எம்ஜி காராக முதலிடம் பிடித்துள்ளது.

இது 2024 அக்டோபரில் விற்பனையான 3,116 விண்ட்சர் இவி கார்களுடன் ஒப்பிடும்போது சுமார் 43% வருடாந்திர வளர்ச்சியை குறிக்கிறது. எனினும், மாதாந்திர விற்பனை 2025 செப்டம்பரில் இருந்த 4,741 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 6% சரிந்துள்ளது. விற்பனையை அதிகரிக்க, 2025 அக்டோபரில் விண்ட்சர் இன்ஸ்பயர் பதிப்பை எம்ஜி அறிமுகப்படுத்தியது. இது 300 யூனிட்கள் மட்டுமே கொண்ட வரையறுக்கப்பட்ட பதிப்பாகும்.

jsw mg motor india sales report of october 2025

இதன் மூலம், ஒரு வருடத்திற்குள் 40,000 யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை விண்ட்சர் இவி அடைந்ததை நிறுவனம் கொண்டாடியது. காமட் இவி (Comet EV) 1,007 யூனிட்கள் விற்பனை உடன் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் இது 13% வருடாந்திர சரிவு மற்றும் 16% மாதாந்திர சரிவாகும்.

ஏனெனில், 2024 அக்டோபரில் 1,151 காமட் இவி கார்கள் மற்றும் 2025 செப்டம்பரில் 1,203 காமட் இவி கார்கள் விற்பனையை எம்ஜி பதிவு செய்திருந்தது. எம்ஜியின் மற்றொரு முக்கிய எலெக்ட்ரிக் காரான இசட்.எஸ் இவி, 609 யூனிட்கள் விற்பனையாகி கடந்த ஆண்டின் 611 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் நிலையான வருடாந்திர செயல்திறனைப் பதிவு செய்துள்ளது.

jsw mg motor india sales report of october 2025

ஆனால், மாதாந்திர விற்பனை ஆனது 2025 செப்டம்பரில் இருந்த 250 யூனிட்களில் இருந்து 144% அதிகரித்து, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேநேரம், எம்ஜி ஹெக்டர்/ ஹெக்டர் பிளஸ் கார்களின் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த ஹெக்டர் கார்களின் விற்பனை 225 யூனிட்களாகக் குறைந்துள்ளது.

இது வருடாந்திர அடிப்படையில் 82% மற்றும் மாதாந்திர அடிப்படையில் 45% சரிவாகும். மேலும், எம்ஜி அஸ்டர் காரும் இதேபோன்ற விற்பனை சவாலை கடந்த மாதத்தில் எதிர்கொண்டுள்ளது. இதன் விற்பனை 2024 செப்டம்பரை காட்டிலும் 87% சரிந்து 102 யூனிட்களாக குறைந்துள்ளது. இருப்பினும், செப்டம்பரில் விற்கப்பட்ட 90 யூனிட்களுடன் ஒப்பிடும்போது அஸ்டரின் மாதாந்திர விற்பனை 13% அதிகரித்துள்ளது.

jsw mg motor india sales report of october 2025

எம்ஜியின் விலையுயர்ந்த முதன்மையான எஸ்யூவியான க்ளோஸ்டர் 2025 அக்டோபரில் 9 யூனிட்களை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது இந்த காருக்கு தேவை குறைந்துள்ளதைக் காட்டுகிறது. க்ளோஸ்டர் கார் மட்டுமின்றி, பிரிமியம் கார்கள் பிரிவில் எம்ஜி தனது எம்ஜி செலக்ட் அவுட்லெட்கள் மூலம் சைபர்ஸ்டர் என்கிற எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் மற்றும் எம்9 என்கிற சொகுசு எம்பிவி காரை தொடர்ந்து விற்பனை செய்கிறது.

No MG Car Sales Oct-25 Oct-24 Diff Growth % YoY % Share Oct 25
1 Windsor 4,445 3,116 1,329 42.65 69.49
2 Comet 1,007 1,151 -144 -12.51 15.74
3 ZS EV 609 611 -2 -0.33 9.52
4 Hector 225 1,224 -999 -81.62 3.52
5 Astor 102 767 -665 -86.70 1.59
6 Gloster 9 176 -167 -94.89 0.14
- Total 6,397 7,045 -648 -9.20 100.00
No MG Car Sales Oct-25 Sep-25 Diff Growth % MoM % Share Sep 25
1 Windsor 4,445 4,741 -296 -6.24 70.47
2 Comet 1,007 1,203 -196 -16.29 17.88
3 ZS EV 609 250 359 143.60 3.72
4 Hector 225 409 -184 -44.99 6.08
5 Astor 102 90 12 13.33 1.34
6 Gloster 9 35 -26 -74.29 0.52
- Total 6,397 6,728 -331 -4.92 100.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், 2025-ல் எம்ஜியின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும், இந்தியாவின் பிரபலமான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகவும் விண்ட்சர் இவி மாறியுள்ளது. இருப்பினும், மற்ற கார்களின் விற்பனை குறைந்திருப்பது, எம்ஜி நிறுவனத்திற்கு சற்று கவலையளிக்க கூடியதாக இருக்கும். ஏனெனில், ஜிஎஸ்டி 2.0 திருத்தம் மற்றும் பண்டிகை கால தேவைகளால் மற்ற கார் நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ள போதிலும், எம்ஜி கார்கள் விற்பனை சற்று குறைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, November 17, 2025, 22:46 [IST]
English summary
Jsw mg motor india cars wise sales report of october 2025 check all details here
மேலும்... #mg motor #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X