சீன கம்பெனிக்கு கீழ் செயல்படுவது பலருக்கு தெரியாது... இந்தியாவில் 1 லட்சம் பேர் வாங்கிய எலெக்ட்ரிக் கார்கள்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், இந்தியாவில் 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இது ஒரு முக்கிய சாதனையாகும். நிலைத்தன்மை மிக்க எதிர்காலத்திற்காக தூய்மையான மற்றும் புத்திசாலித்தனமான போக்குவரத்து தீர்வுகளை வடிவமைப்பதில் இந்த ஆட்டோ-டெக் நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இது ஸ்மார்ட்டான தயாரிப்புகள் மட்டுமல்லாமல், எளிதில் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் சார்ந்த தீர்வுகளையும் வழங்குகிறது. எம்ஜி நிறுவனத்தின் பல்வேறு இவி கார்களின் அதிகப்படியான ரேஞ்ச் மற்றும் வலுவான செயல்திறனே இந்த சாதனையின் முக்கிய உந்துசக்தி ஆகும். இது பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

அன்றாட நகர தேவைகள் முதல் ஆடம்பரமான பயண அனுபவங்கள் வரை, எம்ஜியின் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள், இந்திய நுகர்வோருக்கான புதுமை, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை மிக்க போக்குவரத்து மீதான எம்ஜி பிராண்டின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், எம்ஜி இந்தியாவில் அதன் கார்கள் வரிசையை விரிவுபடுத்தவும், புதிய எரிசக்தி பவர்ட்ரெயின்களையும் சேர்க்கவும் தயாராக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அசல் உபகரண உற்பத்தியாளர்களில் (OEM) ஒன்றாக ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் உருவெடுத்துள்ளது. சீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படும் எம்ஜி பிராண்டின் சந்தைப் பங்கு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 2024 காலண்டர் ஆண்டின் 26%-இல் இருந்து தற்போது 35% ஆக சீராக வளர்ந்துள்ளது.

எம்ஜி எலெக்ட்ரிக் கார்களுக்கான இந்த அதிகரித்து வரும் தேவை, வாடிக்கையாளர்கள் மற்றும் இந்த பிரிவில் கார் வாங்க ஆர்வமாக உள்ளவர்களிடையே வளர்ந்து வரும் ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் பல சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து உள்ளதுடன், இவி பிரிவில் புதிய தரநிலைகளை அமைக்கும் பல தொழில் சார்ந்த முதல் முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், உண்மையான பயனர் அனுபவங்களை எடுத்துக்காட்டுவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் 'இவி சரியானது' என்கிற பொது விழிப்புணர்வு பிரச்சாரமும் அடங்கும். மேலும், அனைத்து சார்ஜிங் தேவைகளுக்கும் ஒரே இடமாக செயல்படும் 'ehub by MG' செயலி, எம்ஜி எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

இதேபோல், 'பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ்' (BaaS), 1000 நாட்களில் 1000 சார்ஜர்களை நிறுவும் நோக்குடன் தொடங்கப்பட்ட 'எம்ஜி சார்ஜ்', மற்றும் ஒரே பேட்டரியை சார்ஜ் நிரப்பி பல்வேறு கார்களில் பயன்படுத்தும் பேட்டரி மறுசுழற்சி திட்டம் மற்றும் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை இரண்டாம் முறையாக பயன்படுத்தும் 'புராஜெக்ட் ரிவைவ்' ஆகியவை அடங்கும்.
எம்ஜியின் இந்த ஒவ்வொரு முயற்சிகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்த முயற்சிகளின் விளைவாக கிடைக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு வலுவான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற இவி சூழலை உருவாக்குவதற்கான பிராண்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இதன் மூலமாகவே பிரிவுகளில் பல தொழிற்நுட்ப வசதிகளை முதல்முறையாக எம்ஜி வழங்கி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே நாட்டில் குறுகிய நேரத்தில் 1 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வது எல்லாம் சாதாரணம் விஷயம் அல்ல. ஆனால், அதனையும் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் நிஜமாக்கி உள்ளது. நம் நாட்டு சந்தையில் எம்ஜியின் அடுத்தக்கட்ட திட்டங்கள் யாவும் எலெக்ட்ரிக் கார்களை சார்ந்தே இருக்கும் என கூறப்படுவதால், இந்த 1 லட்சம் என்கிற விற்பனை எண்ணிக்கை 2 லட்சம் என அதிகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications









