குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒன்னா அழைச்சிட்டு போகலாம்! சாலையில் மிதக்கும் மினி சொகுசு கப்பல்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்9 (M9) என்கிற எலக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரூ.69.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த சொகுசு எலக்ட்ரிக் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்த பிறகு இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் செயல்பாடுகள் மொத்தமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்துள்ளது. கோமெட் இவி (Comet EV) மற்றும் விண்ட்சர் இவி (Windsor EV) என்கிற இரு எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து மார்க்கெட்டையே எம்ஜி அதிர வைத்தது.

jsw mg motor india launches m9 electric car

இந்த நிலையில், அந்த வரிசையில் புதிய எம்9 எலக்ட்ரிக் கார் எம்ஜி மோட்டாரில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், எம்ஜி எம்9 ஆனது விலைமிக்க எலக்ட்ரிக் காராக களமிறக்கப்பட்டு உள்ளது. ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள புதிய எம்9 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.69.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய எம்ஜி எம்9 காருக்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் துவங்கப்பட்டு உள்ளன. விருப்பப்படுவோர் ரூ.1 லட்சம் என்கிற முன்தொகையை செலுத்தி இந்த எலக்ட்ரிக் காரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த புதிய விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரை 'எம்ஜி செலக்ட்' (MG Select) டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.

jsw mg motor india launches m9 electric car

இந்த எம்ஜி செலக்ட் ஷோரூம்களை விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்காகவே எம்ஜி மோட்டார் நிறுவனம் பிரத்யேகமாக நாடு முழுவதும் நிறுவி வருகிறது. இந்த எம்ஜி செலக்ட் ஷோரூம்களில் எம்9 எலக்ட்ரிக் காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் விற்பனையில் போட்டியாக எந்த எலக்ட்ரிக் காரும் இல்லை என்றாலும், விலையை பொறுத்தவரையில், கியா கார்னிவல் (Kia Carnival) மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) கார்களுக்கு போட்டியாக விளங்கும் எம்ஜி எம்9 காரில் 90kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

jsw mg motor india launches m9 electric car

இந்த பேட்டரியின் பவரில் இயங்கும் எம்9 எலக்ட்ரிக் காரின் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 241 பிஎச்பி மற்றும் 350 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 548கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் பெரியதான தோற்றம் தான் எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சம் ஆகும். லெவல்-2 அடாஸ் (ADAS) மற்றும் எலக்ட்ரிக் மூலமாக செயல்படக்கூடிய பின் கதவுகள் உள்ளிட்டவையும் இந்த காரின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும். எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காரை ஓட்டி பார்த்து ஏற்கனவே நாங்கள் எங்களது ரிவியூவை வழங்கி இருந்தோம். விரிவான அந்த கார் விமர்சனத்தை காண விரும்புபவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.

Source: MG Select/ Press Release

More from DriveSpark

Article Published On: Monday, July 21, 2025, 16:01 [IST]
English summary
Jsw mg motor india launches m9 electric car price features battery range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X