ஊரே தூங்கினாலும் கார் ஷோரூம் மட்டும் திறந்தே கிடக்கும்! மக்களுக்காக எம்ஜி எடுத்த அதிரடியான முடிவு!
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் வெற்றிகரமான ஆண்டாக 2025ஐ குறிக்கும் விதமாக, வருகிற டிசம்பர் 5 முதல் 7 வரை நாடு தழுவிய 'மிட்நைட் கார்னிவல்' (Midnight Carnival) என்கிற பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களும், அனைத்து எம்ஜி ஷோரூம்களும் நள்ளிரவு வரை திறந்திருக்கும்.
இது வாடிக்கையாளர்களுக்கு குடும்பத்துடன் தங்கள் விருப்பமான எம்ஜி கார்களை ஆராய்வதற்கும், பண்டிகை அனுபவத்தைப் பெறுவதற்கும் கூடுதல் நேரமும் வசதியும் அளிக்கிறது. இவ்வாறு 'மிட்நைட் கார்னிவல்' ஆனது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களை மையப் புள்ளியாக கொண்டது ஆகும். இது தயாரிப்பு புதுமையையும், மறக்க முடியாத உரிமை அனுபவங்களையும் இணைக்கிறது.

ஷோரூம் நேரங்களை நீட்டித்து, ஈர்க்கக்கூடிய டீலர்ஷிப் செயல்பாடுகளை உருவாக்குவதன் மூலம், கார் வாங்கும் அனுபவத்தை மகிழ்ச்சியான குடும்பக் கொண்டாட்டமாக மாற்றுவதே எம்ஜி பிராண்டின் நோக்கம். இந்த அறிவிப்பு குறித்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி வினய் ரெய்னா கூறுகையில், "ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தில், நாங்கள் கார்களுக்கு அப்பால் சென்று கார் வாங்கும் அனுபவங்களை உருவாக்குகிறோம் என்று உண்மையாகவே நம்புகிறோம்.
எங்கள் பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள அன்பு மற்றும் நம்பிக்கைக்கான சான்றாக இந்த ஆண்டு அமைந்தது. 'மிட்நைட் கார்னிவல்' மூலம், ஒவ்வொரு புதிய பயணமும் எங்களிடமிருந்து ஒரு சிறப்புப் பரிசைக் கொண்டு வரும். இது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், எங்கள் வளர்ந்து வரும் சமூகத்தினரிடையே மகிழ்ச்சியைப் பரப்புவதாகவும் இருக்கும்" என்றார்.

'மிட்நைட் கார்னிவல்' சலுகையில், தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ரூ.11 கோடி மதிப்புள்ள உறுதியான வெகுமதிகள் உண்டு. லண்டன் கனவுப் பயணம், 3 நாள்/2 இரவு விடுமுறை சுற்றுலா வவுச்சர்கள் மற்றும் லைஃப்ஸ்டைல் பரிசுகள் & கேட்ஜெட்டுகள் போன்ற 'ஸ்கிராட்ச் அண்ட் வின்' பரிசுகள் இதில் அடங்கும்.
மேலும், மூன்று மாத EMI விடுமுறை, முழு ஆன்-ரோடு விலைக்கு பொருளாதார நிதி உதவி மற்றும் நெகிழ்வான கடன் கால திட்டங்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான நிதி விருப்பங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் சிரமம் இல்லாமல் எம்ஜி கார்களை சொந்தமாக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அறிமுகமான ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், மேம்பட்ட தொழில்நுட்பம், பாதுகாப்பு, நவீன வடிவமைப்பைக் கொண்ட வலுவான கார்கள் வரிசையை உருவாக்கியுள்ளது. 50,000 யூனிட்கள் விற்கப்பட்டு, எம்ஜி வின்ட்சர் இவி (Windsor EV) இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராகத் திகழ, எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் 1 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
ஹெக்டர் (Hector), அஸ்டர் (Astor), கோமட் இவி (Comet EV), இசட்.எஸ் இவி (ZS EV), குளோஸ்டர் (Gloster) போன்ற எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எரிபொருள் என்ஜின் கார்கள், இந்திய குடும்பங்களுக்கான இணைக்கப்பட்ட, வசதியான, பாதுகாப்பான பயண தீர்வுகளை வழங்கும் ஒரு எதிர்காலத்திற்கான பிராண்டாக எம்ஜியின் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றன.


Click it and Unblock the Notifications








