கமுக்கமா எல்லாரும் இந்த கம்பெனி காரை தான் வாங்குறாங்க! ஒரே மாதத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் பண்டிகைக் காலமான கடந்த 2025 ஆகஸ்ட்- அக்டோபர் மாதத்தில் மொத்த விற்பனையில் 2024 ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை செய்த கார்களை காட்டிலும் 20% வளர்ச்சி கண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இது அவர்களின் சந்தை இருப்பை உறுதிப்படுத்துகிறது. அதேபோல், 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த விற்பனையில் எம்ஜி 27% வளர்ச்சி அடைந்துள்ளது.

2025 அக்டோபரில் எம்ஜி மோட்டார் நிறுவனம் மொத்தம் 6,397 கார்களை விற்பனை செய்து சிறப்பான மாத விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், பிரீமியம் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் எம்ஜி மோட்டார் இந்தியாவின் வலுவான நிலைப்பாடுதான். எம்ஜி செலக்ட் ஷோரூம்கள், ஆடம்பர எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

jsw mg motor india car sales

இது முந்தைய 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 62% விற்பனை வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த சிறப்பான வளர்ச்சி ஆனது எம்ஜி நிறுவனத்தின் CASE (இணைக்கப்பட்ட, ஆட்டோமேட்டிக், பகிரப்பட்ட, எலெக்ட்ரிக்) மொபிலிட்டி குறித்த பார்வையின் விளைவாகும். 2023-ஆம் ஆண்டில் SAIC எம்ஜி மோட்டார் மற்றும் JSW குழுமம் இணைந்து JSW எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை நிறுவியதில் இருந்து இந்த வளர்ச்சி தொடங்கியது.

இந்த கூட்டு முயற்சி, ஒரு புத்திசாலித்தனமான மற்றும் நிலையான வாகன சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் மேம்பட்ட தொழிற்நுட்பங்கள் மற்றும் எதிர்கால தயாரிப்புகளுடன் கூடிய பல்வேறு வாகனங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 1924-ல் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட எம்ஜி பிராண்ட், பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்களுக்குப் பெயர் பெற்றது.

jsw mg motor india car sales

தற்போது, JSW எம்ஜி மோட்டார் இந்தியா குஜராத்தின் ஹாலோல் பகுதியில் அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையை இயக்குகிறது. இதன் ஆண்டு உற்பத்தித் திறன் ஒரு லட்சம் வாகனங்களுக்கும் அதிகமாகும். எம்ஜி ஹெக்டர், எம்ஜி இசட்.எஸ் இவி மற்றும் எம்ஜி க்ளோஸ்டர் போன்ற பல பிரிவுகளில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்த பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு.

பண்டிகைக் காலத்தில் (2025 ஆகஸ்ட்- அக்டோபர்) JSW எம்ஜி மோட்டார் இந்தியாவின் விற்பனை வளர்ச்சி 20% ஆக இருந்தது. 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ஒட்டுமொத்த விற்பனை 27% வளர்ச்சி கண்டுள்ளது. 2025 அக்டோபரில் மட்டும் 6,397 கார்களை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

jsw mg motor india car sales

ஆடம்பர எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் எம்ஜி செலக்ட் மாடல் 62% மாத வளர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட JSW எம்ஜி மோட்டார் இந்தியா கூட்டு நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் SAIC மோட்டார், பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உலகளாவிய சீன நிறுவனமாகும்.

அதேபோல், JSW குழுமம், மற்ற வணிக நிறுவனங்கள் மற்றும் வாடிககையாளர்கள் உடனான பலதரப்பட்ட வணிகங்களை கொண்ட இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனமாகும். இத்தகைய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்தக் கூட்டு முயற்சி, இந்தியாவில் ஸ்மார்ட் மற்றும் நிலையான வாகன சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது வாகன வாங்குபவர்களுக்கு மேம்பட்ட தொழிற்நுட்பங்கள் மற்றும் எதிர்கால தயாரிப்புகளை கவர்ச்சிகரமான விலையில் வழங்குகின்றன.

jsw mg motor india car sales

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட், உலகத் தரம் வாய்ந்த தொழிற்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் துறையை வலுப்படுத்தவும் உறுதியாக உள்ளது. தங்கள் வணிக செயல்பாடுகளில் புதுமைகளை கொண்டு வருவதோடு, உள்ளூர்மயமாக்கல் மூலம் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இத்தகைய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனத்தின் விற்பனை 20% அதிகரித்து இருப்பது இந்த நிறுவனத்தை மேலும் ஊக்கப்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 1, 2025, 22:56 [IST]
English summary
Jsw mg motor india sales 20 percent growth during 2025 august october period
மேலும்... #mg motor #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X