பட்டி-தொட்டில இருக்க மக்களையும் வளச்சு போட முடிவு பண்ணிட்டாங்க.. 4.99 சதவீதம் வட்டியில் இந்த காரை வாங்கலாம்..

இந்தியர்களை முழுமையாக வளைத்துப் போடும் முயற்சியில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ உடனான கூட்டணியை அந்நிறுவனம் கடந்த சிலா மாதங்களுக்கு முன் நிகழ்த்தியது. ஆகையால், இப்போது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் என்கிற பெயரில் அது நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இணைவிற்கு பின்னரே இந்தியாவில் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதுமுக காரை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற இலக்கை அந்நிறுவனம் தீட்டியது.

இதுமட்டுமல்ல அதன் எலெக்ட்ரிக் கார்களுக்கு 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) எனும் பிளானையும் அறிமுகம் செய்தது. இந்த திட்டங்கள் போதாதென்று தற்போது மேலும் சில ஆஃபர்களை அறிவிக்கத் தொடங்கி இருக்கின்றது. இப்போதுகூட அந்நிறுவனம் 'பவர் பேக்' (Power Pack) எனும் ஆஃபரை இந்தியர்களுக்காக அறிமுகம் செய்து இருக்கின்றது.

Jsw mg launches new offer for hector suv

ஹெக்டர் எஸ்யூவி கார் மாடலுக்கான ஓர் ஸ்பெஷல் ஸ்கீமே இதுவாகும். இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பலநிலைகளில் பலன்களை வழங்கக் கூடிய ஓர் ஸ்கீமே பவர் பேக் ஆகும். மிக குறைவான வட்டி விகிதம், கூட்டப்பட்ட வாரண்டி, சாலையோர உதவி மற்றும் இலவச அக்சஸரீஸ்கள் ஆகியவற்றையே எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காருக்கு வழங்க இருக்கின்றது.

இதுதவிர, குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு 50 சதவீதம் வரை சாலை வரி தள்ளுபடியை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்த நிறுவனம் செய்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் ஹெக்டர் காரின் விற்பனை லேசாக சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 4.99 சதவீதம் குறைக்கப்பட்ட வட்டி விகிதமே இந்த காருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

மொத்தமாக ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான பலன்களையே இந்த சிறப்பு ஸ்கீம் வாயிலாக ஹெக்டர் காரை வாங்குபவர்களுக்கு நிறுவனம் வழங்க இருக்கின்றது. நிறுவனத்தின் சிறப்பு சலுகை வாயிலாக தொந்தரவில்லா பயன்பாட்டை ஹெக்டர் எஸ்யூவி கார் உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

பிரச்னை ஏற்பட்டாலும் அதற்கான உதவிகளை நிறுவனம் உடனடியாக இந்த ஆஃபரின்கீழ் வழங்க இருக்கின்றது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக ஹெக்டர் இருக்கின்றது. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியிலேயே தற்போது எம்ஜி களமிறங்கி இருக்கின்றது.

இந்தியாவில் இந்த கார் ரூ. 13.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிறுவனத்தின் பவர் பேக் ஆஃபர் வருகின்ற மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை மட்டுமே நிலுவையில் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, விண்ட்ஸர் இவி-க்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவே இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஒரு சியூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரைத் தொடர்ந்தே ஹெக்டர் காரின் பக்கம் வாடிக்கையாளர்களை வளைத்துப் போட பவர் பேக் ஆஃபரை அறிமுகம் செய்திருக்கின்றது எம்ஜி.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2025, 19:58 [IST]
English summary
Jsw mg motor introduces power pack offer enhancing benefits for hector suv buyers
மேலும்... #mg motor #mg hector #offers #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+