ஷோரூமை தேடி வேற மாநிலத்துக்கு போக தேவையில்லை... குறுகிய காலத்தில் 15வது ஷோரூமை திறந்தாச்சு!
இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிப்பதற்காக, ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தனது "எம்ஜி செலக்ட்" (MG SELECT) சொகுசு சில்லறை விற்பனை ஷோரூம்களை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. தற்போது, இந்தியாவின் 14 முக்கிய நகரங்களில் 15 எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் ஷோரூம் மையங்களுடன், இந்த நிறுவனம் சொகுசு கார் வாங்குபவர்களுக்கு ஒரு மேம்பட்ட மற்றும் பிரத்யேக வாகன கொள்முதல் அனுபவத்தை வழங்கி வருகிறது.
புதிய 15வது எம்ஜி செலக்ட் ஷோரூம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள், எம்ஜி நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களான எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் (M9 Presidential Limousine) மற்றும் எம்ஜி சைபர்ஸ்டர் (Cyberster) என்கிற இரண்டை மட்டுமே தற்சமயம் விற்பனை செய்கின்றன.

எம்ஜி செலக்ட் மையங்கள், ஒரு கலைக்கூடத்தைப் போன்ற அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு கார்களை சிறப்பாக காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் மையங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 1,000 கார்களுக்கும் மேல் விற்பனை செய்துள்ளது. இது, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தை இந்தியாவின் சொகுசு எலக்ட்ரிக் வாகன (EV) பிரிவில் இரண்டாவது பெரிய நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளது.
இந்த சாதனை, எம்ஜி நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்கள் மீதான வலுவான, தொடர்ச்சியான சந்தை தேவையையும், 2024ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களை காட்டிலும் 2025ஆம் ஆண்டில் எம்ஜி நிறுவனத்தின் 32% வளர்ச்சிக்கும் முக்கிய உந்துசக்தியாகவும் அமைந்துள்ளது. எம்ஜி செலக்ட் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் சைபர்ஸ்டர் ஆனது தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

அதுமட்டுமின்றி, எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கிய கார்களிலேயே அதிவேகத்தில் இயங்கக்கூடியதான சைபர்ஸ்டர் 0- 100kmph வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடக் கூடியது. ரூ.74.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் சைபர்ஸ்டர் விற்பனை செய்யப்படும் நிலையில், எம்9 பிரெசிடென்ஷியல் லிமௌசைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.69.90 லட்சம் ஆக தற்சமயம் உள்ளது. சமீபத்தில் ஜெய்ப்பூரில் 15வது எம்ஜி செலக்ட் ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அனுராக் மெஹ்ரோத்ரா கூறுகையில், "நாங்கள் நாட்டின் இரண்டாவது பெரிய சொகுசு இவி பிராண்டாக உயர்ந்தது ஒரு தனித்துவமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. துல்லியம், லட்சியம் மற்றும் கவனம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் உண்மையான சொகுசு ஒவ்வொரு அம்சத்திலும் உணரப்படுகிறது. எம்ஜி செலக்ட் மூலம், புதுமையான விருப்பங்களுடன் ஒன்றிணையும் ஒரு உரிமையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறுகிய காலத்திற்குள் 15வது எம்ஜி செலக்ட் ஷோரூம் திறக்கப்பட்டு இருப்பது இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை குறித்த ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் இலக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது. ஜெய்ப்பூரில் சங்கனேர் ஃபிளைஓவர் அருகில், டோங்க் சாலையில் அமைந்துள்ள புதிய ஜெய்ப்பூர் ஷோரூம், 'சொகுசை மறுபரிசீலனை செய்தல்' (Reimagining Luxury) என்ற எம்ஜி செலக்ட்டின் தத்துவத்திற்கு உதாரணமாகத் திகழ்கிறது.
விசாலமான, அமைதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சூழல்களைக் கொண்ட இந்த மையங்கள், கார் வாங்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்கின்றன. இவ்வாறு எம்ஜி செலக்ட் ஷோரூம்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, அடுத்ததாக புதியது புதியதாக விலையுயர்ந்த கார்களை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது என்பதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








