டிசம்பரிலும் எம்ஜி-தான் டாப்புல இருக்கா! டாடா யாரு மொகத்துல முழிச்சுதுனே தெரியல இப்படி அடி வாங்கிட்டு இருக்கு!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor), விற்பனையில் மாபெரும் வளர்ச்சியைச் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் சமீப சில மாதங்களாகவே விற்பனையில் வளர்ச்சியை மட்டுமே சந்தித்து வருகின்றது. குறிப்பாக, அது விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு களமிறக்கியதில் இருந்தே இந்த நிறுவனத்திற்கு அதிர்ஷ்டம் அடித்ததைப் போல விற்பனை வரவேற்பானது கட்டுக்கடங்காமல் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே சென்ற 2024 டிசம்பர் மாதம் அமைந்து உள்ளது.

2024 டிசம்பரில் மட்டும் நிறுவனத்தின் தயாரிப்புகள் மொத்தமாக 7 ஆயிரத்து 516 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. முந்தைய மாதங்களைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும். குறிப்பாக, இது 2023 ஆண்டு டிசம்பரைக் காட்டிலும் 55.29 சதவீதம் அதிகம் ஆகும். 4,840 யூனிட்டுகளே 2023 டிசம்பரில் எம்ஜி வாகனங்கள் விற்பனையாகி இருந்தன.

MG motor sees 55 percent growth in december 2024

இதன் வாயிலாக முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது நல்ல வரவேற்பு எம்ஜி வாகனங்களுக்கு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் இந்த நிறுவனத்திற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பானது அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதற்கு சான்றாகவும் 2024 டிசம்பர் அமைந்திருக்கின்றது.

2024 நவம்பரில் மொத்தமாகவே 6,019 யூனிட்டுகள் எம்ஜி வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. இதைக் காட்டிலும் 1,500 யூனிட் வரையிலேயே அதிகமாக 2024 டிசம்பரில் எம்ஜி கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. எம்ஜி நிறுவனத்தின் இந்த விற்பனை வளர்ச்சியில் அதன் மின்சார கார்களே மிகப் பெரிய பங்களிப்பை வகிக்கின்றன.

ஒட்டுமொத்த விற்பனையான 7,516 யூனிட்டுகளில் ஐசிஇ வாகனங்கள் 2,254 யூனிட்டுகள் மட்டுமே பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. மீதமுள்ள 5,262 யூனிட்டுகளும் மின்சார வாகனங்கள் ஆகும். இந்த அளவிற்கு அமோக வரவேற்பையே எம்ஜி எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் தற்போது பெற்றுக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, எம்ஜி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய விண்ட்ஸர் இவி-க்கே மிக மிக அமோகமான வரவேற்பு நாட்டில் கிடைத்திருக்கின்றது. அதாவது, பிராண்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக விண்ட்ஸர் இவி மாறியிருக்கின்றது. இது ஓர் சியூவி (CUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

இந்த காரை 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) எனும் திட்டத்தின்கீழ் அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்கீழ் விண்ட்ஸர் இவி-யை வாங்கும்போது பேட்டரிக்கான தொகையை செலுத்த வேண்டியது இல்லை. இந்த திட்டத்தின் வாயிலாகவே இப்போது இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் கார் மாடல் விண்ட்ஸர் இவி மாறியிருக்கின்றது.

இந்த இடத்தை கடந்த மூன்று மாதங்களாகவே விண்ட்ஸர் இவி-யே அலங்கரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு முன்னதாக இந்த இடத்தை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV)-யே அலங்கரித்து வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் இடம் இருந்தே முன்னணி இடத்தை விண்ட்ஸர் இவி தட்டி பறித்திருக்கின்றது.

பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தின்கீழ் விண்ட்ஸர் இவி-யை ரூ. 10 லட்சத்திற்கே வாங்கிக் கொள்ள முடியும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த திட்டம் இல்லாமல் விண்ட்ஸர் இவி-யை வாங்கினால் கூடுதலாக மூன்று லட்ச ரூபாய் வரை செலுத்த வேண்டும். இந்த சூப்பரான திட்டம் விண்ட்ஸர் இவிக்கு மட்டுமல்ல கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV) ஆகிய இ-கார்களுக்கும் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மூன்றாவது மாதமாக டாடா நெக்ஸான் இவி, எம்ஜி விண்ட்ஸர் இவி-யிடம் விற்பனையில் அடி வாங்கி இருப்பது வாகன உலகிற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவின் மிக அதிக பாதுகாப்பு திறன்மிக்க மற்றும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மின்சார காரே டாடா நெக்ஸான் இவி ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2025, 22:13 [IST]
English summary
Jsw mg motor reports 55 percent year on year growth in december 2024 with 7516 units sold
மேலும்... #mg motor #electric car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+