டாடாவ ஒழிச்சரணும்னு கங்கணம் கட்டியிருக்காங்க! அடிமாட்டு விலையில் மார்க்கெட்டை அதிர விட போகும் எலெக்ட்ரிக் கார்

இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 6,678 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு காலண்டர் வருடத்தின் ஒரு மாதத்தில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் பதிவு செய்த அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை இதுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

MG ZS EV Interior

முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் 4,575 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் 46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில் 2 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில், எம்ஜி எம்9 (MG M9) ஒன்றாகும். எலெக்ட்ரிக் எம்பிவி (Electric MPV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் விலை 69.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MG ZS EV

மற்றொன்று எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster) ஆகும். இதன் விலை 74.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எலெக்ட்ரிக் கார்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இப்படி விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு களமிறக்கி வரும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம், கூடிய விரைவில் மிகவும் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கருதப்படுகிறது.

இது குறித்து ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் தளம் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. 10 லட்ச ரூபாய் என்ற விலையில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்திடம் இருந்து புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 10 லட்ச ரூபாய் என்ற விலையில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கினால், அது இந்திய சந்தையில் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் இது எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு நெருக்கடியையும் ஏற்படுத்தலாம். முன்னதாக எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) எலெக்ட்ரிக் காரின் வருகையே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. இந்த சூழலில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 10 லட்ச ரூபாய் எலெக்ட்ரிக் காரும் களமிறக்கப்பட்டால், அது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கடியை மேலும் அதிகமாக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 4, 2025, 14:27 [IST]
English summary
Jsw mg motor sales report july 2025 46 per cent growth
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+