இவ்ளோ பெரிய வண்டியோட விலை ரூ. 10.35லட்சம் மட்டுமா!.. ஜுபிடர் இ-லோடு வண்டி அறிமுகம்.. டாடா ஏஸ் எல்லாம் ஓரமா போ!

ஜெம் (JEM) என அழைக்கப்படும், ஜூபிடர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Jupiter Electric Mobility), நிறுவனம் தன்னுடைய புதுமுக லோடு (வர்த்தக பயன்பாட்டு) வண்டியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஜெம் டெஸ் (JEM TEZ) எனும் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் இலகு ரக கமர்சியல் (Electric Light Commercial Vehicle) வாகனம் ஆகும். டாடா ஏஸ் (Tata ACE) போன்ற சிறிய இலகு ரக லோடு வண்டிகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாகவே இந்த வாகனத்தை ஜூபிடர் எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக 10 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிறுவனம் இந்த புதிய வாகன மாடலை மட்டுமல்ல தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையையும் இந்தியாவில் திறந்து வைத்திருக்கின்றது.

Jem tez electric light commercial vehicle launched

இந்தூரில் உள்ள பீதம்பூரிலேயே தன்னுடைய புதிய மின்வாகன உற்பத்தி ஆலையை ஜூபிடர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் திறந்து வைத்திருக்கின்றது. ஆண்டிற்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மின்சார இலகு ரக வர்த்தக பயன்பாட்டு வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதே இந்த புதிய உற்பத்தி ஆலை ஆகும்.

மார்க்கெட்டை மொத்தமாக தன் பக்கம் வளைத்துப் போடும் நோக்கிலேயே புதிய ஆலை மற்றும் புதிய இலகு ரக கமர்சியல் வாகனம் உள்ளிட்டவற்றை இந்தியாவில் ஜூபிடர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய ஜெம் டெஸ் ஓர் முழு சார்ஜில் 190 கிமீ தூரம் வரை பயணிக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

Jem tez electric light commercial vehicle pic

பிரத்யேகமாக டெலிவரி சேவையைக் கருத்தில் கொண்டு இந்த வாகனத்தை தாங்கள் வடிவமைத்து இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் 1.05 டன் வரையிலான எடைக் கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அளவு அதிக பாரத்தை ஏற்றிச் செல்வதற்கு ஏற்ப 80kW திறன் கொண்ட மோட்டாரே ஜெம் டெஸ் வாகனத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இது அதிக பாரத்தை சுமக்கக் கூடிய மற்றும் அதிக ரேஞ்சை தரக் கூடிய லோடு வண்டி அல்ல. அதீத வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட கமர்சியல் எலெக்ட்ரிக் வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. சிசிஎஸ்2 வகை சார்ஜிங் கருவியைப் பயன்படுத்தி ஜெம் டெஸ்-ஐ சார்ஜ் செய்தால் வெறும் ஒரு மணி நேரத்தில் 100 கிமீ பயணிப்பதற்கான சார்ஜை அது ஏற்றிக் கொள்ளும்.

இதில் மட்டுமல்ல நவீன கால தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கி இருப்பதிலும் இந்த லோடு வண்டி சிறந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. இதன் கேபின் இன்றைய கார்களுக்கு இணையானதாக பிரீமியம் நிறைந்ததாகக் காட்சியளிக்கின்றது. தன்னுடைய நாடு தழுவிய விரிவாக்க திட்டத்தின் கீழே தன்னுடைய புதிய ஆலையை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

இந்த நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலேயே புதிதாக கால்தடம் பதித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்த நகரங்களில் விரைவில் ஜெம் டெஸ் எலெக்ட்ரிக் லோடு வண்டியை காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளைப் போலவே மின்சாரத்தில் இயங்கம் லோடு வண்டிகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஜெம் நிறுவனம் தன்னுடைய புதிய கமர்சியல் வாகனத்தை விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 10:23 [IST]
English summary
Jupiter electric mobility launches tez electric light commercial vehicle new manufacturing facility
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+