நானோவை விஞ்சும் குட்டி கார் இது! விலையை கேட்டா அசந்துடுவீங்க!

பெரிய சிட்டிக்குள் பயணிப்பதில் இருக்கும் மிகப்பெரிய சவால் நெருக்கடி மிகுந்த சாலைகளில் பயணிப்பது தான். இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் சாலை நெருக்கடிகள் அதிகமாவிட்டது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதே நிலை தான். இதில் பெரிய காரை ஓட்டி செல்வது சவாலான விஷயம். சிட்டிக்கும் அதிகம் பயணிப்பவர்கள் தற்போது சிறிய ரக கார்களைதான் தேர்வு செய்கிறார்கள். இந்தியாவில் 4 பேர் பயணிக்கும் சிறிய கார்கள் தான் அதிகம் விற்பனையாகிறது.

ஜப்பானில் இந்த பிரச்சனையை சமாளிக்க கேஜி மோட்டார் நிறுவனம் சிங்கிள் சீட்டர் கொண்ட சிறிய ரக எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நம்மூரில் பிரபலமான நானோ காரை விட இந்த கார் சிறியாதாக இருகு்கிறது. அதே நேரம் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும் காரில் லக்கேஜை வைக்கவும் இடம் இருக்கிறது.

KG Motors Mibot

கேஜி மோட்டார் நிறுவனம் இந்த காரை 7000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ5.98 லட்சம் என்ற விலையி்ல விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த காருக்கு அந்நிறுவனம் மைபாட் அல்லது மொபிலிட்டி ரோபட் என பெயர் வைத்துள்ளது. ஜப்பானில் உள்ள ஹீரோஷிமாவை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. முதற்கட்டமாக 3300 கார்களை மட்டுமே அந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் பாதிக்கும் அதிகமான கார்கள் தற்போதே விற்றுவிட்டன.இந்த காரின் டெலிவரியை இன்னும் அந்நிறுவனம் துவங்கவில்லை. 2027ம் ஆண்டு மார்ச் மாதம் தான் இந்த காரின் டெலிவரி துவங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டொயோட்டா நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இந்த கார் தற்போது உள்ள விற்பனை டிரெண்டை பார்க்கும் போது அடுத்த 2 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டொயோட்டாவை பின்னிற்குதள்ளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

KG Motors Mibot

கேஜி மோட்டார் நிறுவனத்தின் இந்த மைபாட் கார் 1500 மிமீ உயரம் கொண்டதாக இருக்கிறது.இந்த கார் முழு சார்ஜில் 100 கி.மீ வரை பயணிக்கம் திறன் கொண்டதாக இருக்கிறது. இதற்கான பேட்டரியை சார்ஜ் ஏற்ற 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கார் மொத்தம் 3300 கார்கள் தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் 300 கார்களை ஹீரோஷிமா மாகாணத்தில் மட்டும் முதற்கட்டமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பாக்கியுள்ள 3000 கார்கள் படிப்படியாக ஒவ்வொரு நகருக்கம் அனுப்பபடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெறும் பட்சத்தில் ஆண்டிற்கு 10000 கார்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

KG Motors Mibot

இந்த காரை பயன்படுத்தி குறுகலான சாலைகளிலும் நெருக்கடி மிகுந்த சாலைகளிலும் சுலபமாக ஓட்டி செல்ல முடியும். இந்த கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவிலும் குறுலான சாலைகள் மற்றும் நெருக்கடி மிகுந்த சாலைகள் அதிகம் உள்ளன. இந்த கார் இந்தியாவிற்கு வந்தாலும் விற்பனை அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேஜி மோட்டார் நிறுவனம் மக்களின் தேவையை அறிந்து சிறிய ரக காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது நிச்சயம் ஜப்பானில் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்தியாவிலும் இதே போன்ற சிறிய காரின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் விலையும் குறைவாக இருந்தால் நிச்சயம் அந்த காரும் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 29, 2025, 13:40 [IST]
English summary
Kg motors mibot single seat ev becomes hit in japan
மேலும்... #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X