ஒரே காரில் 7 பேர் ஒன்னா போலாம்! புக்கிங் கூரைய பிச்சுகிட்டு கொட்டீட்டு இருக்கு! இந்த ரேட்ல வித்தா விடுவோமா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பாரப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார், கடந்த மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனான கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி, கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.
இந்த 2 கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த 2 கார்களின் முன்பதிவுகள் (Bookings) எண்ணிக்கை மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி ஆகிய 2 கார்களுக்கும் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்துள்ளது என கியா அறிவித்திருப்பதாக கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கியா கேரன்ஸ் க்ளாவிஸ், ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.50 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 21.50 லட்ச ரூபாய் ஆக உள்ளது.
மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17.99 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 24.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இதில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரானது, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரானது, 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி ஆகிய 2 கார்களிலும் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.
இதில், லெவல் 2 அடாஸ், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். தற்போது கிடைத்துள்ள 21 ஆயிரம் முன்பதிவுகளில், 20 ஆயிரம் முன்பதிவுகள், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கு கிடைத்துள்ளன. எஞ்சிய 1,000 முன்பதிவுகள், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்திருக்கின்றன.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன.
அவை 51.4 kWh மற்றும் 42 kWh ஆகியவை ஆகும். இதில், 51.4 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 490 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அதே நேரத்தில் 42 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 404 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம். இவை அராய் அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் (ARAI Driving Range) என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற கார்களாக கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி ஆகியவை திகழ்கின்றன. இந்த கார்களில் வழங்கப்படும் பிரீமியமான வசதிகள், அவற்றுக்கு கிடைத்து வரும் பிரம்மாண்டமான வரவேற்பிற்கு மிக முக்கியமான காரணங்களாக திகழ்கின்றன.


Click it and Unblock the Notifications








