வெறும் 4 மாதத்தில் 21,000 பேர் இந்த காரை புக் பண்ணிட்டாங்க! அப்படி என்னதாங்க இருக்குது இதுல?
கியா நிறுவனம் கடந்த 4 மாதத்தில் கிளாவிஸ் காருக்கு 21,000 புக்கிங்களை பெற்றுள்ளது. இந்நிறுவனம் மிக குறுகிய காலத்திலேயே இவ்வளவு அதிகமான புக்கிங்கை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த காரில் அப்படி என்ன இருக்கிறது? மக்கள் ஏன் இந்த காரை அதிகம் விரும்புகின்றனர்? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தனது கேரன்ஸ் கிளாவிஸ் காருக்கான புக்கிங்கை துவங்கியது. இந்நிலையில் தற்போது வைரை 21 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 20,000 பேர் நேரடியாக கிளாவின் கம்பஷன் இன்ஜின் காரையும் 1000+ நபர்கள் கிளாவிஸ் எலெக்ட்ரிக் காரையும் புக்கிங் செயண்துள்ளது.

கேரன்ஸ் கிளாவிஸ் காரை பொருத்தவரை 2வது வரிசை சீட்டிங் சாய்வு தன்மையுடன் கொண்டதாக இருக்கிறது. இந்த சீட் ஸ்லைடிங், ஃபோல்டிங் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் உள்ளன. இதை எல்லாம் ஒரு பட்டனிலேயே செய்ய முடியும். மூன்றாவது வரிசையை ஆக்ஸஸ் செய்ய இது வசதியாக இருக்கும்.
இந்த காரின் உட்புறம் பிரிமியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டுயல் 12.3 இன்ச் பானரோமிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர் கொண்ட பாஸ் ஸ்பீக்கர் சிஸ்டம், டுயல் டேஷ்கேம், 64 கலர் ஆம்பியன்ஸ் லைட்டிங், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

கிளாவிஸ் இவி காரை பொருத்தவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கியாவின் முதல் எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் 171 பிஎச்பி பவரையும், 255 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 51.4kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு முறைசார்ஜ் போட்டால் 490 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 42kWh பேட்டரி பேக்கும் இருக்கிறுது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 404 கி.மீ ரேஞ்ச் தரும் என சான்றழிக்கப்பட்டுள்ளது.
இந்த காரை 100kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் 10-80 சதவீத பேட்டரியை வெறும் 39 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிவிட முடியும். இந்த இவி கார் அதன் கம்பஷன் இன்ஜின் காரின் வடிவமைப்பிலேயே இருக்கிறது. இந்த காரின் உள்ளே 67.62 செ.மீ டுயல் பானரோமிக் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. 90 கனெக்டெட் கார் அம்சங்கள், 7 சீட்டிங் லே அவுட், அதிக இடவசதி, என இந்த செக்மெண்டில் விற்பனையாகும் மற்ற கார்களில் இல்லாத பல அம்சங்கள் இதில் உள்ளது.

கேரன்ஸ் கிளாவிஸ் மற்றும் கிளாவிஸ் இவி ஆகிய இரண்டு கார்களிலும் லெவல் 2 அடாஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 20 ஆட்டோமெட்டிக் டிரைவிங் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் பாதுகாப்பு அம்சத்திற்காக 18 அம்சங்கள் உள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பின்பக்க பயணிகளுக்கான அலர்ட், 360 டிகிரி சரவுண்ட் வியூ மானிட்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் விலை அதிகமாக இருந்தாலும் வெறும் 4 மாதத்தில் 21,000 பேர் இந்த காரை புக் செய்துள்ளது. மிகப்பெரிய வரவேற்பு இந்த காருக்கு கிடைத்துள்ளது என்பதற்கான அறிகுறிதான். இந்த காரருக்கு தொடர்ந்து விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









