இந்த விலையில் விற்பனைக்கு வந்தால் ஷோரூம்களில் கூட்டம் அள்ளும்! கியா உருவாக்கிய புது காரின் விலை இதுதானா?
கியா (Kia) நிறுவனத்தில் இருந்து புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் கார் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. காரை பற்றிய விபரங்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ள கியா நிறுவனம், அதேநேரம் கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கான முன்பதிவுகளையும் துவங்கியுள்ளது. ஆனால், காருக்கான விலைகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், காரின் விலை இதுதான் என தெரிவிக்கும் வகையில் இணையத்தில் கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் விலைகள் கசிந்துள்ளன. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் விலை குறைவான கார்களுக்கே சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், குறைந்த விலையில் காரை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களே மார்க்கெட்டில் வெற்றி பெற்றுள்ளன. இந்த வகையில், கியா நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு துவக்கத்தில் கேரன்ஸ் என்கிற எம்பிவி காரை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், கேரன்ஸ் கார்களை அனைத்து விதமான கஸ்டமர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் புதியதாக கேரன்ஸ் க்ளாவிஸ் என்கிற கார் அறிமுகம் செய்யப்படுகிறது. கேரன்ஸ் காரின் அடுத்த தலைமுறை வெர்சனாக கேரன்ஸ் க்ளாவிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், கேரன்ஸ் காரை காட்டிலும் கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.
கியா கேரன்ஸ் காரை பிரீமியம் தரத்தில் வாங்க விரும்புபவர்களுக்கு புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், கேரன்ஸ் காரும் தொடர்ந்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டுவரும் நிலையில், இந்த காரின் விலை அந்த அளவிற்கு எல்லாம் அதிகமாக இருக்காது என்பதை தெரிவிக்கும் வகையில், இணையத்தில் இந்த புதிய காரின் விலைகள் லீக் ஆகி உள்ளன.

நமக்கு கிடைத்துள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, புதிய கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.60 லட்சத்தில் இருந்து ரூ.20.20 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட உள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கேரன்ஸ் க்ளாவிஸ் கார் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம்.
இதில், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் இந்த காரின் விலை ரூ.11.60 லட்சத்தில் இருந்து ரூ.12.60 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட உள்ளன. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் ரூ.13.33 லட்சத்தில் இருந்து ரூ.17.65 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட உள்ளன. ஆற்றல்மிக்க டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.13.20 லட்சத்தில் இருந்து ரூ.20.20 லட்சம் வரையில் இந்த காரின் விலை நிர்ணயிக்கப்பட உள்ளன.

இந்த மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆனது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும். ஆனால், மற்ற இரு என்ஜின் ஆப்ஷன்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின் மூலம், கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் வேரியண்ட்கள் குறித்த விபரங்களும் நமக்கு தெரியவந்துள்ளன.
பிரீமியம், கிராவிட்டி, பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் பிளஸ், லக்சரி பிளஸ், எக்ஸ்-லைன் என ஆறு விதமான வேரியண்ட்களில் இந்த புதிய கியா கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், விலைமிக்க எக்ஸ்-லைன் வேரியண்ட் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்க உள்ளது. அதேபோல், டீசல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற வேண்டுமெனில், பிரெஸ்டீஜ் பிளஸ் வேரியண்ட்டை வாங்க வேண்டும்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரை மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய சந்தையில் கியா நிறுவனம் களமிறக்குகிறது. இந்தியாவில் கார் வாங்குபவர்களின் இரசனை மெல்ல மெல்ல விலையுயர்ந்த கார்களை நோக்கி நகர்ந்து வருவதால், அதற்கேற்ப கியாவும் தன்னை அப்டேட் செய்துக் கொண்டுள்ளது. மேற்கூறப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலைகள் உடன் விற்பனைக்குவரும் புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் கார் மக்கள் மத்தியில் கவனத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









