எந்த சீட்டில் அமர்ந்தாலும் சவுகரியமா இருக்கே... கியாவில் மீண்டும் ஒரு தரமான கார்!! ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. மே 23ஆம் தேதியில் விலைகள் அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய கியா காருக்கான முன்பதிவுகள் கடந்த மே 9ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கியாவின் விலை குறைவான எம்பிவி (MPV) ரக காரான கேரன்ஸின் அடிப்படையில் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கேரன்ஸின் அப்டேட் வெர்சனாகவே புதிய கேரன்ஸ் கிளாவிஸ் கொண்டுவரப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட இந்த புதிய கியா காரை நாங்கள் சமீபத்தில் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்களை ரிவியூவாக கீழேயுள்ள வீடியோவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

நீளம், அகலம், உயரம் உள்ளிட்ட பரிமாண அளவுகளில் கிட்டத்தட்ட கேரன்ஸை ஒத்துக் காணப்பட்டாலும், இவை இரண்டிற்கும் இடையே தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் நிறைய வேறுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக, புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரின் முன்பக்கமும், பின்பக்கமும் தோற்றத்தில் மேம்படுத்தப்பட்டதாக உள்ளன. காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட் & எல்இடி டிஆர்எல்-கள், பம்பர் என அனைத்தின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், காரின் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது.

car test drive review video

அப்படியே காருக்கு உள்ளே சென்றால், டேஸ்போர்டில் 22.62 இன்ச்சில் நீளமான திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த திரையை பொழுதுப்போக்கிற்காக பயன்படுத்துவது மட்டுமின்றி, டிரைவருக்கு தேவையான விபரங்களையும் பெற முடியும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக லெவல்-2 அடாஸ் (ADAS) இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான டிரைவ் மோட்கள் கேரன்ஸ் கிளாவிஸ் காரில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, May 16, 2025, 14:01 [IST]
English summary
Kia carens clavis car test drive review video check all details here
மேலும்... #kia motors #kia carens #car review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+