சென்னைல இருந்து கோவைக்கு 7 பேர் போக வெறும் 500 ரூபாதானா! மொத்த இந்தியாவையும் மிரள விடும் புது கார்!
இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி கிடைத்து கொண்டுள்ளது.
எனினும் கூடிய விரைவில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின், 6 சீட்டர் ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் HTX+ ER வேரியண்ட் அடிப்படையில், இந்த 6 சீட்டர் மாடல் விற்பனைக்கு களமிறக்கப்படலாம்.

6 சீட்டர் மாடல் என்பதால், இதன் 2வது வரிசையில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டிருக்கும். இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் புதிய 6 சீட்டர் மாடலின் விலை எவ்வளவு? என்பது வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
HTX+ ER வேரியண்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டால், இந்த 6 சீட்டர் மாடலில், 51.4 kWh பேட்டரி (Battery) வழங்கப்பட்டிருக்கும். இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 490 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கும். தற்போது விற்பனையில் உள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் HTX+ ER 7 சீட்டர் மாடலில் ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

இதில், லெவல் 2 அடாஸ், ட்யூயல் பனரோமிக் சன்ரூஃப், 67.62 செமீ ட்யூயல் பனரோமிக் டிஸ்ப்ளே பேனல், 8 ஸ்பீக்கர்கள் உடன் பாஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், சுறா துடுப்பு ஆன்டெனா, ஸ்மார்ட் கீ, 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், ஏக்யூஐ டிஸ்ப்ளே உடன் ஸ்மார்ட் ப்யூர் ஏர் ப்யூரிஃபையர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதுதவிர முன் பகுதியில் வென்டிலேஷன் வசதி உடன் கூடிய இருக்கைகள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் V2L (Vehicle To Load) தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்தும் அப்படியே 6 சீட்டர் மாடலிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் மட்டுமல்லாது, 360 டிகிரி கேமரா, அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் ரிமைண்டர் உடன் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்தும் 6 சீட்டர் மாடலிலும் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 24.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கேப்டன் இருக்கைகள் உடன் 6 சீட்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டால், அது இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் HTX+ ER வேரியண்ட்டை இயக்குவதற்கான செலவு (Running Cost) ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 1.05 ரூபாய் மட்டுமே என கார்தேக்கோ தளம் கூறியுள்ளது. அப்படியானால் சென்னையில் இருந்து கோவைக்கு (510 கிலோ மீட்டர்கள்) 535.50 ரூபாய் மட்டுமே செலவாகும். இது 7 சீட்டர் மாடலை இயக்குவதற்கான செலவு ஆகும். 6 சீட்டர் மாடலை இயக்குவதற்கான செலவும் கிட்டத்தட்ட இதே அளவில்தான் இருக்கும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








