சென்னையில் இருந்து மதுரை போக வெறும் 67 ரூபாதான் செலவு! மார்க்கெட்ட தலைகீழா புரட்டி போட போகும் 7 சீட்டர் கார்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் கார், கடந்த சில நாட்களுக்கு முன்பு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன.
அவை 42 kWh மற்றும் 51.4 kWh பேட்டரி ஆகியவை ஆகும். இதில், 42 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 404 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் 51.4 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 490 கிலோ மீட்டர்கள் ஆகும். இவை அராய் (ARAI) அமைப்பால் சான்றளிக்கப்பட்ட டிரைவிங் ரேஞ்ச் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

100 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை, வெறும் 39 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அத்துடன் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன.
வசதிகளை பொறுத்தவரையில், தலா 12.3 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள 2 திரைகள் முக்கியமானது ஆகும். இதில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். மேலும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியையும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி கொண்டுள்ளது.

இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனரோமிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர் பாஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் உடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளையும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. மேலும் 90 வசதிகளை உள்ளடக்கிய கனெக்டட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் மற்றும் 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் 7 சீட்டர் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 24.49 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்த சூழலில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு, நாளை முதல் (ஜூலை 22) முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.
கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் கியா டீலர்ஷிப்கள் மூலமாக கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாளையில் இருந்து முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்படும் நிலையில், கூடிய விரைவில் டெலிவரி (Delivery) பணிகளும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார்தான், இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஆகும். எனவே இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அராய் டிரைவிங் ரேஞ்ச்படி பார்த்தால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் 51.4 kWh பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் மூலம், சென்னையில் இருந்து மதுரைக்கு சிங்கிள் சார்ஜில் பயணம் செய்ய முடியும். சென்னை-மதுரை இடையேயான தொலைவு சுமார் 450 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் இந்த வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 490 கிலோ மீட்டர்களாக உள்ளது. இருப்பினும் நடைமுறை பயன்பாட்டில் டிரைவிங் ஸ்டைல் உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து, டிரைவிங் ரேஞ்ச் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு (Running Cost) வெறும் 1.05 ரூபாய் மட்டுமே செலவாகும் என கார்தேக்கோ தளம் தெரிவித்துள்ளது. அப்படியானால் சென்னையில் இருந்து மதுரை வர சுமார் 472.50 ரூபாய் மட்டுமே செலவாகும். இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 7 சீட்டர் கார் ஆகும்.
எனவே சென்னையில் இருந்து மதுரை வர ஒருவருக்கு 67.50 ரூபாய் மட்டுமே செலவாகும். இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு என்பதால், பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








