டெஸ்லா பரபரப்பில் இப்படியொரு எலக்ட்ரிக் கார் வந்ததையே மறந்துட்டோம்! கியா உருவாக்கி உள்ள 7-சீட்டர் காரின் விலை!
கியா (Kia) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் புதியதாக கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Carens Clavis EV) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.17.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் கார் ஆனது எச்டிகே+ (HTK+), எச்டிஎக்ஸ் (HTX), எச்டிஎக்ஸ்+ (HTX+) என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மூன்று வேரியண்ட்களில் என்னென்ன மாதிரியான தொழிற்நுட்ப அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
எச்டிகே+: புதிய கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் காரின் விலை குறைவான வேரியண்ட் இதுவாகும். 42kWh மற்றும் 51.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த புதிய கியா எலக்ட்ரிக் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பினும், எச்டிகே+ வேரியண்ட்டை 42kWh பேட்டரி உடன் மட்டுமே வாங்க முடியும். மேலே குறிப்பிடப்பட்ட ரூ.17.99 லட்சம் விலை ஆனது இந்த எச்டிகே+ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், எச்டிகே+ வேரியண்ட்டில் 16 இன்ச்சில் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஏரோ அலாய் சக்கரங்கள், ஐஸ் க்யூப் எல்இடி எம்.ஆர்.எஃப் ஹெட்லைட்கள், ஆக்டிவ் ஏர் ஃபிளாப், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய வெளிப்பக்க மிரர்கள், முழுவதும் ஆட்டோமேட்டிக்காக செயல்படக்கூடிய ஏசி, 26.62 இன்ச்சில் ட்யூயல் பனோராமிக் சன்ரூஃப், லெவல்-2 அடாஸ் (ADAS) உள்ளிட்டவற்றை சிறப்பம்சங்களாக பெறலாம்.
எச்டிஎக்ஸ்: புதிய கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் காரின் இந்த வேரியண்ட்டை மட்டுமே 42kWh, 51.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் வாங்கலாம். 42kWh பேட்டரி உடன் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.49 லட்சமாகவும், 51.4kWh பேட்டரி உடன் ரூ.22.49 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த எச்டிஎக்ஸ் வேரியண்ட்டிலும் 26.62 இன்ச்சில் ட்யூயல் பனோராமிக் சன்ரூஃப், வயர் எதையும் இணைக்காமல் மொபைல் போனை இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் கொண்டுவரும் வசதி, ஸ்டேரிங் சக்கரத்தில் ஆடியோ கண்ட்ரோல்கள், 64 வண்ணங்களில் கேபினை சுற்றிலும் விளக்குகள், பழுப்பு & நேவி நிறத்தில் லெதெரேட்டட் இருக்கைகள், லெவல்-2 அடாஸ் (ADAS) உள்ளிட்டவை கிடைக்கும்.
எச்டிஎக்ஸ்+: புதிய கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலக்ட்ரிக் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான இது பெரிய அளவிலான & பவர்ஃபுல்லான 51.4kWh பேட்டரி உடன் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலைமிக்க வேரியண்ட்டில் அளவில் பெரியதாக 17 இன்ச்சில் ட்யூயல்-டோன் ஏரோ அலாய் சக்கரங்கள் கிடைக்கும். அத்துடன், முன்பக்கத்தில் சார்ஜ் செய்யும் பகுதியில் ஒளிரும் விளக்கு, மோஷன் சென்சார் & ரிமோட் ஸ்டார்ட் உடன் ஸ்மார்ட் சாவி, புறஊதா கதிர்களை தடுக்கக்கூடிய சோலார் ஜன்னல் கண்ணாடிகள், 8 ஸ்பீக்கர்கள் உடன் போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், காரின் சார்ஜில் மற்ற மின்சாதனங்களை இயங்க வைக்கும் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் இந்தியாவில் பலத்தரப்பட்ட மக்களால் வாங்கக்கூடிய வகையில் குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ள முதல் எலக்ட்ரிக் கார், கேரன்ஸ் கிளாவிஸ் இவி ஆகும். என்ன... ரூ.17.99 லட்சத்தை காட்டிலும் இன்னும் கொஞ்சம் குறைவான விலையில் இந்த எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டிற்கு வரும் என எதிர்பார்த்தோம். இருப்பினும், ரூ.17.99 லட்சம் என்பது கூட மிகவும் அதிக விலை கிடையாது. மேற்கூறப்பட்ட மூன்று வேரியண்ட்களில் எதை வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்து அதன் தொழிற்நுட்ப அம்சங்கள் இருக்கும்.


Click it and Unblock the Notifications









