7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா... அடுத்த மாசம் மார்க்கெட் அதிர போகுது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் ஆகும்.
இந்த சூழலில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இதில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 51.4kWh மற்றும் 42kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) காரில், இந்த பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதே பேட்டரி ஆப்ஷன்கள்தான் அப்படியே கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் கார், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். இது கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, அதிக வசதிகள் (Features) கொண்டதாகவும் இருக்கும். இதில், லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதுதவிர 12.25 இன்ச் அளவில் 2 திரைகள் (ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்), முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் கார், வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக கூடிய விரைவில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது கூடிய விரைவில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் காரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரிய வரும். அதற்கு பிறகு வரும் ஜூலை மாதத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை கியா இவி6 (Kia EV6) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகியவை ஆகும். இதில், கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் விலை 65.97 லட்ச ரூபாயாக இருக்கிறது.
மறுபக்கம் கியா இவி9 எலெக்ட்ரிக் காரின் விலை 1.30 கோடி ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்வளவு அதிகமாக இருக்காது. அனேகமாக கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் காரின் விலை 19 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 26 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இதன் மூலம் கியா நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது. ஆனால் இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








