டாடா, மஹிந்திராவை கதற விட போகும் 7 சீட்டர் கார்! விலை இவ்ளோதானா! நாளைக்கு மொத்த மார்க்கெட்டும் அதிர போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் கார், நாளை (ஜூலை 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டிசைன் (Design): ஏற்கனவே விற்பனையில் உள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவேதான், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இருக்கும். ஆனால் ஐசி இன்ஜின் வெர்ஷனிடம் இருந்து எலெக்ட்ரிக் வெர்ஷனை வேறுபடுத்தி காட்டும் வகையில், டிசைனில் ஒரு சில மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

Kia Carens Clavis Front Seat

இந்த எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் போர்ட் முன் பகுதியில் வழங்கப்பட்டிருக்கும். பின் பகுதியை பொறுத்தவரையில், ஐசி இன்ஜின் வெர்ஷனை போலவே, கனெக்டட் எல்இடி லைட் பார் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இதன் டிசைன், அனைவரையும் கவர கூடிய வகையில் இருக்கும்.

வசதிகள் (Features): கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய டிரைவர் இருக்கை, முன் மற்றும் பின் பகுதி பயணிகளுக்கு வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கியா சைரோஸ் (Kia Syros) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகிய கார்களில் இருப்பதை போன்ற 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகள் எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Carens Clavis

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளையும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு வசதிகள் (Safety Features): அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளை எல்லாம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அஸிஸ்ட் மற்றும் ஆட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற வசதிகளை எல்லாம் உள்ளடக்கியதாக இருக்கலாம்.

பேட்டரி மற்றும் ரேஞ்ச் (Battery And Range): கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், 51.4 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 490 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இதுதவிர 42 kWh பேட்டரியையும் கியா நிறுவனம் கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் டிரைவிங் ரேஞ்ச் 400 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். இது போன்ற சிறப்பம்சங்கள் உடன் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 விதமான இருக்கை ஆப்ஷன்கள் உடன் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), டாடா கர்வ் இவி (Tata Curvv EV), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை கேரன்ஸ் க்ளாவிஸ் இவி பெறவுள்ளது. அனேகமாக இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 16 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 14, 2025, 17:53 [IST]
English summary
Kia carens clavis ev launch tomorrow expected price safety features battery and range
மேலும்... #kia motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+