ரேட் இவ்வளவு கம்மியா? கியா வெளியிட்ட இந்த இவி காரை வாங்கி குவிக்க போறாங்க!
கியா நிறுவனம் தனது கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் எச்டிஎக்ஸ் இ மற்றும் எச்டிஎக்ஸ் இ (இஆர்) என்ற இரண்டு வேரியன்ட்களை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல விதமான வரவேற்ப்பை பெற்ற நிலையில் புதிய வேரியன்ட்களை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் தனது கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் அணிவகுப்பை விரிவுப்படுத்தியுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு எச்டிஎக்ஸ் இ மற்றும் எச்டிஎக்ஸ் இ (இஆர்) ஆகிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முறையே ரூ19.99 லட்சம் முதல் ரூ21.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகுமாகியுள்ளது. இது ஒரு மிட் சைஸ் எலெக்ட்ரிக் வாகனமும் ஆகும்.

இதில் எச்டிஎக்ஸ் இ வேரியன்டை பொரத்தவரை 42 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. அதே போல எச்டிஎக்ஸ் இ (இஆர்) வாகனத்தை பொரத்தவரை 51.4kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டிருந்தது. இது முறையே 404 மற்றும் 490 கி.மீ ரேஞ்சைதரும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
இந்த வேரியன்ட்கள் எச்டிகே+ மற்றும் எச்டிஎக்ஸ் ஆகிய மாடல்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்பட்டுள்ளுது. இந்த வாகனங்களில் பானரோமிக் சன்ரூஃப், எல்இடிலைட்டுகள், வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வாகனத்தில் உள்ள அனைத்துஜன்னல்களும் ஒரு டச் செய்தால் தானாக ஏறி இறங்கும்அம்சம் கொண்டதாக இருகு்கிறது.

மேலும் இந்த வாகனத்தில் வயர்லெஸ் சார்ஜர், டுயல் டோன் ஸ்டியரிங் வீல் உள்ளது. இதில் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மென்ட்கள் உள்ளன. மேலும் இந்த காரில் லெதரேட் சீட்டுகள் உள்ளன. மேலும் இந்த காரில் ஏர்ஃப்யூரிபயர் அம்சம் உள்ளது. மேலும் இந்த காரின் உட்புற லைட்டிங் செட்டப் மல்டி கலரில் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீட்டிற்கு பின்னால் மடக்கி வைக்க கூடிய டேபிள் வசதி இருக்கிறது.
மேலும் இந்த கார்களில் உள்ளே 26.6 இன்ச் டுயல் பானரோமிக் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும், மற்றொன்று டிரைவர் டிஸ்பிளேவாகவும் செயல்படுகிறது. இந்த காரில் 90 கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளது. இந்த காரில் லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 99kw மற்றும் 126kW மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 255 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த இரண்டு கார்களும் 10-80 சதவீத சார்ஜை வேகமான சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 39 நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடும். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், உள்ளிட்ட 18 அம்சங்கள் உள்ளன.
கியா நிறுவனம் தனது இவி வாகனங்களை சார்ஜ் செய்ய 11 ஆயிரம் சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவியுள்ளது. மேலும் கே-சார்ஜ் பிளாட் மூலம் இதை சார்ஜ் செய்ய முடியும் இதற்கு மை கியா ஆப்பை பயன்பஐத்தி லைவ் சார்ஜர் இருக்கும் இடம். அதற்கு செல்லும் ரூட் ஆகியவற்றை பெற்ற முடியும்.
மேலும் கியா டிரைவ் கிரீன் முன்னெடுப்பு மூலம் எவ்வளவு மாசு சேமிக்கப்படுகிறது என்பது கண்காணிக்கப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல மரம் நடும் நிகழ்வும் நடத்தப்படடுள்ளது. தற்போது கியா கேரன்ஸ் இவி லைன்அப்களில் மொத்தம் 6 வேரியன்ட்கள் உள்ளன. அதன்படி எச்டிகே +, எச்டிஎக்ஸ் இ, எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ் இ (இஆர்), எச்டிஎக்ஸ் (இஆர்) மற்றும் எச்டிஎக்ஸ்+ (இஆர்) ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரை பொருத்தவரை இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு இவி கார் என்பதால் எதிர்காலத்தில் நல்ல விற்பனையை பெறப்போகிறது. இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









