வெறும் 50 ரூபால சென்னைல இருந்து பெங்களூர் போகலாம்! ட்ரெயின்ல போற செலவை விட ரொம்ப கம்மியா இருக்கேப்பா!
இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் கார் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் கியா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
எனவே கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை கேரன்ஸ் க்ளாவிஸ் இவி பெற்றுள்ளது. இந்த சூழலில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு இன்று (ஜூலை 22) முதல் முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கியா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாக, கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், 51.4 kWh பேட்டரி ஒன்றாகும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 490 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று 42 kWh பேட்டரி ஆகும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 404 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்துமே அராய் (ARAI) அமைப்பால் சான்று வழங்கப்பட்ட டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் 2 பேட்டரிகளுமே ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் ஆக கூடியவையாக உள்ளன.

100 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 39 நிமிடங்களிலேயே, இந்த 2 பேட்டரிகளையும், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அத்துடன் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில், ஏராளமான வசதிகளும் (Features) கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், லெவல் 2 அடாஸ், ட்யூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். அதே நேரத்தில் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options), கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், அதை இயக்குவதற்கு ஆகும் செலவுதான் (Running Cost). கார்தேக்கோ தளம் தெரிவித்துள்ள தகவலின்படி பார்த்தால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு, வெறும் 1.05 ரூபாய் மட்டுமே செலவு ஆகும்.
அப்படியானால் சென்னையில் இருந்து பெங்களூர் வர 346.50 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். சென்னை-பெங்களூர் இடையேயான தொலைவு சுமார் 330 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் எம்பிவி ரகத்தை சேர்ந்தது என்பதால் 7 பேர் பயணம் செய்ய முடியும்.
இந்த வகையில் பார்த்தால், ஒருவருக்கு 49.50 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார்கள் உடன் ஒப்பிடும்போது, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு. அத்துடன் 7 பேர் பயணம் செய்ய முடியும். எனவே தொலை தூர பயணங்களுக்கான செலவை, இது வெகுவாக குறைக்கும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார் மிகவும் ஏற்றது. பெட்ரோல், டீசல் கார்களில் பயணம் செய்தால் செலவிடும் தொகையை, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் மிகப்பெரிய அளவில் சேமிக்கலாம்.


Click it and Unblock the Notifications









