சென்னையில் இருந்து பெங்களூர் வர 50 ரூபா கூட செலவு ஆகாது! மொத்த இந்தியாவையும் மிரள விட்ட புதிய கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). தற்போதைய நிலையில் மொத்தம் 3 வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகியவை ஆகும்.

இதன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக (3 வெர்ஷன்களும் சேர்த்து), 8,779 கியா கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Kia Carens Clavis EV Seats

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 6,384 கியா கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 2,395 கியா கேரன்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் கியா கேரன்ஸ் கார் விற்பனையில் 37.52 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், கியா நிறுவனத்தின் கார்களிலேயே, விற்பனையில் அதிக அளவிலான வளர்ச்சியை பதிவு செய்த கார் என்ற பெருமையையும், இதன் மூலமாக கியா கேரன்ஸ் பெற்றுள்ளது. அதாவது கியா கேரன்ஸ் அளவிற்கு வேறு எந்த கியா காரும் விற்பனையில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை பதிவு செய்யவில்லை.

Kia Carens Clavis EV

இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால், மிக முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம், கியா கேரன்ஸ் என்ற ஒரே ஒரு வெர்ஷன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த 2 புதிய வெர்ஷன்களின் வருகை காரணமாகவே கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை 11.08 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக உள்ளது. இவை கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் பிரம்மாண்டமானதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காரின் 3 வெர்ஷன்களில், இயக்குவதற்கு மிகவும் சிக்கனமான ஒரு வெர்ஷன் தேவை என்றால், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை நீங்கள் தேர்வு செய்யலாம். கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்க வெறும் 1.05 ரூபாய் மட்டுமே செலவு ஆகும் என கார்தேக்கோ தளம் தெரிவித்துள்ளது.

அப்படியானால் சென்னையில் (Chennai) இருந்து பெங்களூர் (Bangalore) பயணிக்க (சுமார் 330 கிலோ மீட்டர்கள்) சுமார் 346.50 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இது 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார் ஆகும். எனவே சென்னையில் இருந்து பெங்களூர் வர ஒருவருக்கு சுமார் 49.50 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். ஆனால் ஓட்டும் விதம், மின்சார கட்டணம் மற்றும் வேரியண்ட் ஆகியவற்றை பொறுத்து, இயக்குவதற்கான செலவு (Running Cost) சற்று மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, December 1, 2025, 17:38 [IST]
English summary
Kia carens clavis ev sales report october 2025 37 52 per cent growth
மேலும்... #kia motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+