ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா இந்த கார் எவ்வளவு தூரம் போகும் தெரியுமா? தெரிஞ்சா உடனே வாங்கிடுவீங்க!
மே 23 ஆம் தேதி இந்தியா மார்கெட்டிற்கு அறிமுகமாகவிருக்கும் கேரன்ஸ் கிளாவீஸ் காரின் ARAI-சான்றளிக்கப்பட்ட மைலேஜ் விபரங்களை Kia இந்தியா வெளியிட்டுள்ளது. மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் இந்த வாகனம் கிடைக்கும் என்பதால், இந்த அறிமுகம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொன்றும் அற்புதமான மைலேஜ் திறனை உறுதியளிக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வ முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது மற்றும் காரின் வேரியன்ட்கள், இன்ஜின்கள் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது, விலை விவரங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. எதிர்பார்க்கப்படும் தொடக்க விலை சுமார் ரூ. 12 லட்சமாகவுள்ளது.
கேரன்ஸ் கிளாவீஸ் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷடன் வருகிறது., இது 160 PS பவர் மற்றும் 253 Nm டார்க் திறனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது, மேலும் 6MT கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல், இது 6iMT மற்றும் 7DCT கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது. இது ஏற்கனவே உள்ள கேரன்ஸ் மாதிரிகளில் கிடைப்பதை போலவே உள்ளது. கூடுதலாக, இது 115 PS பவரை வழங்கும், 1.5-லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் மற்றும் 116 PS பவரை வழங்கும், 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன, இரண்டும் 6MT அல்லது 6AT கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் கிடைக்கும்.

மைலேஜ் திறன் கேரன்ஸ் கிளாவீஸ் காரின் வலிமையான அம்சமாகும், குறிப்பாக அதன் டீசல் வேியன்ட்களில். டீசல் இன்ஜினின் 6-ஸ்பீடு மேனுவல் எடிசன் 19.54kpl என்ற அற்புதமான மைலேஜுடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் எடிசன் 17.50kpl மைலேஜை தருகிறது.
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினின் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் 16.66kpl மைலேஜையும், மேனுவல் மற்றும் iMT கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இரண்டும் 15.95kpl மைலேஜையும் வழங்குகின்றன. நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின், அதன் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன், 15.34kpl மைலேஜை வழங்குகிறது. இருப்பினும் மாருதி எர்டிகா மற்றும் மாருதி XL6 போன்ற போட்டியாளர்களை விட சற்று குறைவாக உள்ளது.

வெளிப்புறத்தில், கேரன்ஸ் கிளாவீஸ் ஒரு நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது ஒருங்கிணைந்த டர்ன் சிக்னல்களுடன் மெல்லிய ஸ்டாருடன் LED DRLகள் மற்றும் ஐஸ்-கியூப் MFR LED ஹெட் லைட்களை கொண்டுள்ளது. கேரன்ஸ் MPV இல் காணப்படும் R16 அலாய்ஸ்களை விட ஒரு படி மேலே, R17 கிரிஸ்டல் கட் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் வாகனத்தின் சாலை ரைடிங் அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இது சாட்டின் குரோம் ஃபினிஷ் உடன் வலுவான முன் மற்றும் பின் ஸ்கிட் பிளேட்களை கொண்டுள்ளது. மேலும் ஸ்டார் விடிவ LED கனெக்டெட் டெயில் லைட்டுகள் பின்புறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கேரன்ஸ் கிளாவீஸின் உட்புறம் சமமான அற்புதமானதாக இருக்கிறது, இது இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் நோக்கங்களுக்கு இரண்டையும் செய்யும் 26.62-இன்ச் டுயல் பனோரமிக் டிஸ்ப்ளே பேனலை கொண்டுள்ளது. இது Kia கேரன்ஸில் காணப்படும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை விட ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட் ஆகும். கிளாவீஸ் கூடுதல் வசதி மற்றும் அம்சங்களுக்காக 4-வழி பவர்டு டிரைவர் சீட்டையும் கொண்டுள்ளது.

Kia கிளாவீஸில், குறிப்பாக 7DCT வேரியன்டில், பாதுகாப்பு மிக முக்கிய அம்சமாக உள்ளது. இது 20 அம்சங்களை வழங்கும் ADAS Level 2 ஐ கொண்டுள்ளது. இவற்றில் பிளைண்ட் ஸ்பாட் கொலிஷன் வார்னிங், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் வித் ஸ்டாப் & கோ மற்றும் டிரைவர் அட்டென்ஷன் வார்னிங் ஆகியவை உள்ளன. இது பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில் 6-ஏர்பேக்குகள், ESC, ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இது டிரைவர் மற்றும் பயணிகளுக்கு நிம்மதியையும் பாதுகாப்பையும் அளிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: Kia கேரன்ஸ் கிளாவீஸ் அதன் இன்ஜின் ஆப்ஷன்கள், சிறந்த மைலேஜ் திறன், நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றுடன் இந்திய மார்கெட்டில்ல் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் அறிமுகம் விரைவில் நிகழவிருப்பதால், சாத்தியமான வாகடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









