மாருதி மார்க்கெட்டை மொத்தமா சரிக்க போகும் கார் நாளைக்கு லான்ச்! தளபதி கடைசி படத்தை விட எதிர்பார்ப்பு எகிறுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார், நாளை (மே 23) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) காருக்கு போட்டியாக விற்பனைக்கு வரவுள்ள கார் ஆகும். கியா நிறுவனத்தின் கார்களுக்கே உரித்தான வகையில் கேரன்ஸ் க்ளாவிஸ் காரில், ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள ட்யூயல் 12.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதில் ஒரு டிஸ்ப்ளே டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக இயங்கும். இதுதவிர லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது.

Kia Carens Clavis Front View

இவற்றுடன், பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியிருப்பதற்கு இந்த வசதிகள் எல்லாம் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options) பெற்றுள்ளது. அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின்கள் ஆகும்.

Kia Carens Clavis Rear Profile

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மொத்தம் 5 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன. அவை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகியவை ஆகும். பொதுவாக கியா நிறுவனத்தின் கார்கள் நிறைய வேரியண்ட்களில் (Variants) அறிமுகம் செய்யப்படும்.

பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இதற்கு கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரும் விதிவிலக்கு அல்ல. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவை HTE, HTE(O), HTK, HTK+, HTK+(O), HTX மற்றும் HTX+ ஆகியவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மட்டுமல்லாது, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கும் போட்டியாக இருக்கும். கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். இந்த கார் எங்களை பல விதங்களிலும் கவர்ந்தது.

நாங்கள் கருதுவது என்னவென்றால், சரியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதுதான். கியா நிறுவனம் விலையை மட்டும் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், கேரன்ஸ் க்ளாவிஸ் 'ஹிட்' அடிக்கும் என்பது எங்கள் கருத்து. இந்த காரின் விலை எவ்வளவு? என்ற கேள்விக்கு, நமக்கு நாளை பதில் தெரிந்து விடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 22, 2025, 17:27 [IST]
English summary
Kia carens clavis launch tomorrow features variants engine gear box options
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+