மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட போகும் 7 சீட்டர் கார்! எல்லாரும் எதிர்பாத்த விலையிலேயே களத்துல எறக்கீட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார், மே 23ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன், டர்போ சார்ஜருடன் கூடிய 1.5 லிட்டர் GDi பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 158 பிஹெச்பி பவர் மற்றும் 253 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் 3வது இன்ஜின் ஆப்ஷன், 1.5 லிட்டர் டீசல் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும். எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக இது திகழ்கிறது.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

இவை தவிர, பனரோமிக் சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர், பேடில் ஷிஃப்டர்கள், டிரைவிங் மோடுகள் (ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்), 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்ற வசதிகளும், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 21.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். பலரும் எதிர்பார்த்த விலையிலேயே கியா கேரன்ஸ் க்ளாவிஸ் களமிறக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் க்ளாவிஸ், பிரீமியம் எம்பிவி (Premium MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) போன்ற கார்களுடன், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் போட்டியிடும். அத்துடன் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த சில கார்களுக்கும், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் விற்பனையில் சவால் அளிக்கும்.
இதன்படி மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) போன்ற எஸ்யூவி ரக கார்கள் உடனும், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் பிரீமியம் எம்பிவி கார் விற்பனையில் போட்டியிடும்.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Deliveries) செய்யும் பணிகள் அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









