வீட்டுக்கு ஓட்டிட்டு போனவங்க எல்லாரும் செம்ம ஹாப்பி!! குடும்ப குடும்பமா கியா ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து புதியதாக கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) கார் அறிமுகம் செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். 2022ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் கியாவின் விலை குறைவான எம்பிவி (MPV) ரக காரான கேரன்ஸின் புதிய விலைமிக்க வெர்சனாக கேரன்ஸ் கிளாவிஸ் களமிறக்கப்பட்டு உள்ளது. விலைமிக்கது என்றவுடன் மிகவும் விலைமிக்கது என நினைத்துவிட வேண்டாம். ஏனெனில், புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.11.49 லட்சத்தில் இருந்து கியா நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

அதிகப்பட்சமாக ரூ.21.49 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கேரன்ஸ் கிளாவிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சற்று அதிக விலையில் கியா கேரன்ஸ் காரை வாங்க விரும்புபவர்களை டார்க்கெட் செய்து புதிய கேரன்ஸ் கிளாவிஸ் கடந்த மே 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கார் அறிமுகம் செய்யப்பட்டது மே 23 என்றாலும், காருக்கான புக்கிங்குகள் கடந்த மே 9ஆம் தேதியில் இருந்தே அறிவிக்கப்பட்டப்படி துவங்கிவிட்டன.

kia carens clavis deliveries started

இதனால், கிட்டத்தட்ட 1 மாத காலமாக கேரன்ஸ் கிளாவிஸ் காரை பலரும் ஆர்வத்துடன் புக் செய்து வருகின்றனர். டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா (Toyota Innova Crysta), மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) மற்றும் எக்ஸ்.எல்6 (XL6) கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரை இதுவரையில் பேர் புக் செய்துள்ளதாக தெரிவித்து இருந்தோம்.

இந்த நிலையில், இந்த புதிய கியா காரை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் எதிர்பார்த்ததை போன்று ஜூன் 6ஆம் தேதியான இன்றில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள கியா டீலர்ஷிப் ஷோரூம்களில் கேரன்ஸ் கிளாவிஸ் கார்களை புக் செய்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக டெலிவிரி பெற்று வருகின்றனர்.

kia carens clavis deliveries started

அந்த வகையில், ஒரு தம்பதியினர் தங்களது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 (Hero Xpulse 200) என்கிற அட்வென்ச்சர் பைக்கில் ஷோரூமுக்கு வந்து பிராண்ட்-நியூ கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரை டெலிவிரி பெறும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஜோடியாக ஷோரூமுக்கு வந்த இந்த தம்பதியினர் தங்களது புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரை ஒரு கண்ணோட்டம் பார்வையிட்ட பிறகு, ஷோரூம் அதிகாரிகள் உடன் அமர்ந்து காரை டெலிவிரி பெறுவதற்கான ஆவண வேலைகளை செய்வதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

பின்னர் குடும்பத்துடன் கேக் வெட்டி காரை அவர்கள் டெலிவிரி பெறுவதையும் வீடியோவில் காண முடிகிறது. புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரின் தோற்றத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதன் முன்பக்கத்தில் தலைக்கீழான L-வடிவிலான எல்இடி டி.ஆர்.எல்-கள், புதிய முக்கோண வடிவிலான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பகுதியளவு மூடப்பட்ட முன்பக்க கிரில் பகுதியை பார்க்க முடிகிறது.

kia carens clavis deliveries started

இவற்றுடன், இந்த காரின் வெளிப்பக்கத்தில் 17 இன்ச்சில் ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்கள் மற்றும் காருடன் ஒருங்கிணைக்கப்பட்ட ரூஃப் ரெயில்களும் வழங்கப்படுகின்றன. பின்பக்கத்தில் C-வடிவில் எல்இடி டெயில்லைட்களை பெறும் புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காருக்கு உள்ளே டேஸ்போர்டில் 26.6-இன்ச்சில் பனோராமிக் டிஸ்பிளே கொடுக்கப்படுகிறது. இதில்தான், காருக்கான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உள்ளிட்டவை அடங்குகின்றன.

கேரன்ஸ் கிளாவிஸ் காரில் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களை கியா வழங்கியுள்ளது. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் என்பன அவை ஆகும். இவற்றுடன் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2022இல் கேரன்ஸ் காரை எந்த அளவிற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் கியா அறிமுகம் செய்ததோ அதே எதிர்பார்ப்புடன் கேரன்ஸ் கிளாவிஸ் காரையும் கியா களமிறக்கி உள்ளது. இத்தகைய காரின் டெலிவிரிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் இந்த புதிய கியா காரை சாலைகளில் காணலாம். கேரன்ஸ் கிளாவிஸ் காரை விற்பனை செய்யும் அதேநேரம், கேரன்ஸ் காரையும் தொடர்ந்து விற்பனை செய்ய கியா முடிவெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, June 6, 2025, 23:36 [IST]
English summary
Kia carens clavis mpv car deliveries started all over india
மேலும்... #kia #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X