மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட 7 சீட்டர் கார்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்கறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis). முன்பு கியா கேரன்ஸ் என்ற பெயரில்தான் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த மே மாத இறுதியில் இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் என்ற பெயரில், இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. தற்போது கியா கேரன்ஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் என்ற 2 மாடல்களிலும் இந்த கார் விற்பனையாகி கொண்டுள்ளது. இந்த சூழலில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் விற்பனையில், 54 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 5,154 கியா கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் வருகையால், இந்த எண்ணிக்கை, நடப்பு 2025ம் ஆண் ஜூன் மாதம் 7,921 ஆகு உயர்ந்துள்ளது.
இது 54 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை கியா கேரன்ஸ் க்ளாவிஸ் பெற்றுள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கையானது, கியா கேரன்ஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகிய 2 மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 11.41 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை 11.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இதில், கியா கேரன்ஸ் கார் தற்போது 7 சீட்டர் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ளது. இனி வரும் மாதங்களில் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம். கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பதுதான் இதற்கு காரணம்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் கார், வரும் ஜூலை 15ம் தேதி (நாளை மறு நாள்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் வருகைக்கு பின்னர், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் எலெக்ட்ரிக் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 16 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த விலையில் களமிறக்கபட்டால், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய கார்களுக்கு எல்லாம், கியா கேரன்ஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் ஆகிய கார்கள், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








