இந்த கார் வந்துச்சுனா மாருதி ஷோரூம் காத்து வாங்க ஆரம்பிச்சுரும்! மொத்த குடும்பத்தையும் ஒன்னா ஏத்தீட்டு போலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார்களில் (MPV Cars) ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த கார், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காருடைய ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.60 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 19.70 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு கியா கேரன்ஸ் காரை வாடிக்கையாளர்கள் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதுகின்றனர். எனவே ஒவ்வொரு மாதமும் தோராயமாக 5 ஆயிரம் - 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கியா கேரன்ஸ் கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன.

Kia Carens

இருப்பினும் இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கியா நிறுவனம் விரும்புகிறது. எனவே டிசைன் (Design), வசதிகள் (Features) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அப்டேட் செய்யப்பட்ட கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலைகளில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்த புதிய மாடலின் அறிமுக விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த மாதம், அதாவது வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Kia Carens Side View

கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பனரோமிக் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா மற்றும் புதிய 2 டோன் அலாய் வீல்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை.

எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தக்க வைக்கப்படவுள்ளன. இதன்படி தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதம் கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், ஜூன் மாதம் கியா கேரன்ஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் என 2 புதிய மாடல்கள் அடுத்தடுத்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதால், மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய கார்களுக்கு விற்பனையில் கடுமையான நெருக்கடி ஏற்படலாம்.

ஆனால் கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு அப்டேட்களுடன் களமிறங்கவுள்ளதால், தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், விலை சற்று அதிகமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இருப்பினும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்ற பெருமையை கியா கேரன்ஸ் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 12, 2025, 13:55 [IST]
English summary
Kia carens facelift india launch next month all you need to know
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+