நாள் குறிச்சுட்டாங்க! இந்த காருக்குதான் நாடே ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கு! நடுக்கத்தில் மாருதி!

இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கியா நிறுவனத்தின் கார்களில் ஒன்று கேரன்ஸ் (Kia Carens). இது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து வரும் ஒரு எம்பிவி ரக கார் ஆகும். கியா கேரன்ஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இருப்பினும் இந்த காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கியா நிறுவனம் விரும்புகிறது. எனவே கேரன்ஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது.

கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் (Kia Carens Facelift) மாடல், இந்திய சாலைகளில் நீண்ட காலமாகவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இதன் அறிமுக தேதி (Launch Date) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் மே 8ம் தேதி (May 8) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Kia Carens Side Design

இது கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்காக காத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், நிறைய டிசைன் (Design) அப்டேட்கள் செய்யப்படவுள்ளன. இதன்படி க்ரில் மற்றும் பம்பர்களின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர புதிதாக டிசைன் செய்யப்பட்ட ட்யூயல் டோன் அலாய் வீல்கள், புதிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க கூடிய அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சம் இருக்காது.

Kia Carens

இதன்படி லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் ஆகிய வசதிகளை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு வசதிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

எனவே கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அதிநவீன வசதிகள் நிரம்பிய ஒன்றாக இருக்கும். ஆனால் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை. அதாவது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் வசதிகள்தான் தொடர்ந்து வழங்கப்படும்.

இதன்படி 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போபெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். அதே நேரத்தில் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என மொத்தம் 3 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காரின் தற்போதைய மாடல், 10.60-19.70 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை இதை விட சற்று அதிகமாக இருக்கும். கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 24, 2025, 22:13 [IST]
English summary
Kia carens facelift launch date may 8 know all the key details here
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+