மாருதி மார்க்கெட்டை ஆட்டம் காண வைக்க போகும் புத்தம் புதிய கார்! மொத்த குடும்பமும் ஒரே நடைல போயிரலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் கியா நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னதாக கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளன. இந்த சூழலில் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பனரோமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) வசதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள மாடலில் சிங்கிள் பேன் சன்ரூஃப் (Single-pane Sunroof) வசதி மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Kia Carens

பனரோமிக் சன்ரூஃப் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. அதாவது பனரோமிக் சன்ரூஃப் என்பது அளவில் மிகவும் பெரியது. கிட்டத்தட்ட மேற்கூரையின் பெரும்பாலான பகுதியை இது 'கவர்' செய்து விடும். ஆனால் சிங்கிள் பேன் சன்ரூஃப் என்பது சிறியது.

மேற்கூரையின் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே இது 'கவர்' செய்யும். எனவே சிங்கிள் பேன் சன்ரூஃப் உடன் ஒப்பிடும்போது, பனரோமிக் சன்ரூஃப் உள்ள கார்களில் வானத்தை நன்றாக ரசிக்கலாம். கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பனரோமிக் சன்ரூஃப் தவிர, அடாஸ் வசதியும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Kia Carens Side Design

Advanced Driver Assistance System என்பதன் சுருக்கம்தான் ADAS. இது பல்வேறு பாதுகாப்பு வசதிகளை உள்ளிடக்கிய ஒரு தொகுப்பு ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் அடாஸ் வசதி தற்போது பிரபலமாகி வருகிறது. ஆனால் கியா கேரன்ஸ் காரில் அடாஸ் வசதி கிடையாது.

எனவே அந்த குறையை போக்கும் வகையில், கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கியா நிறுவனம் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 2 புதிய வசதிகளும், கியா கேரன்ஸ் காருக்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிகிறது. எனவே தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களே தொடர்ந்து வழங்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் கார், 10.60-19.70 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் புதிய வசதிகள் உள்ளிட்ட காரணங்களால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கலாம்.

இருப்பினும் கியா நிறுவனம் சரியான விலையையே நிர்ணயம் செய்யும் என நாம் எதிர்பார்க்கலாம். கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) ஆகிய கார்களுக்கு எல்லாம் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல், தற்போது விற்பனையில் உள்ள மாடலை போன்றே, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக கியா கேரன்ஸ் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 20:37 [IST]
English summary
Kia carens facelift mpv to get panoramic sunroof and adas check all details here
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+