மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்! இத்தன பேர ஏத்தீட்டு போகலாமா! புக்கிங் தொடங்கியது!

இந்திய சந்தையில் எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. எம்பிவி ரக கார்களில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். எனவே கார்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்களை நடத்தி கொண்டிருப்பவர்கள் மத்தியில் எம்பிவி ரக கார்களுக்கு நல்ல 'டிமாண்ட்' உள்ளது. அத்துடன் ஒரு சில குடும்பங்களில் நிறைய பேர் இருப்பார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களின் முதல் தேர்வும் கூட எம்பிவி ரக கார்களாகதான் உள்ளன. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய சந்தையில் எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகின்றன.

இதில், கியா கேரன்ஸ் (Kia Carens) மிகவும் முக்கியமானது. இது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து வரும் ஒரு பிரபலமான எம்பிவி ரக கார் ஆகும். தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமாராக 5,500 கியா கேரன்ஸ் கார்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கியா நிறுவனம் விரும்புகிறது.

Kia Carens

எனவே கேரன்ஸ் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை கியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர தயாராகி விட்டது.

ஆம், கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு ஒரு சில டீலர்ஷிப்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் (Unofficial Bookings) தொடங்கப்பட்டிருப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kia Carens Side Design

25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தினால், கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தற்போதே முன்பதிவு செய்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது. கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு புதிய வசதிகள் (Features) வழங்கப்படும் என வெளியாகி வரும் தகவல்கள்தான் இதற்கு காரணம்.

இதன்படி கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், சிங்கிள் பேன் சன்ரூஃப்பிற்கு பதிலாக பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு இடம்பெறலாம் எனவும் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுடன் தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 2வது வரிசையில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் ஆகிய அம்சங்களையும் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் எதிர்பார்க்க முடியும். அத்துடன் டிசைனிலும் (Design) நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்களின் டிசைன் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பம்பரிலும் நாம் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என நாங்கள் கருதுகிறோம்.

அதாவது தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படவுள்ளது. அதேபோல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களிலும் நாம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கியா நிறுவனம் கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தொடர்ந்து, அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் கார் தற்போதைய நிலையில் 10.60 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட், 19.70 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

பல்வேறு அப்டேட்கள் செய்யப்படவுள்ள காரணத்தால், கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை, இதை காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இருக்கும். மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகிய கார்களுக்கு எல்லாம் கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை நெருக்கடியை ஏற்படுத்தும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2025, 16:52 [IST]
English summary
Kia carens facelift unofficial bookings open ahead of launch features engine options design
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+