டீசல் காரை வாங்கினால் கெத்தா பார்க்குற காலம் எல்லாம் மாறி போச்சு! பெட்ரோல் கார்களில் அப்படி என்ன தான் ஸ்பெஷல்?

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் எம்பிவி (MPV) ரக கார், கேரன்ஸ் (Carens) ஆகும். 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் மலிவான கியா காராக அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே கேரன்ஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. கேரன்ஸ் காருக்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்ததை அடுத்தே, புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் (Carens Clavis) என்கிற காரை கடந்த மே 8ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கியா நிறுவனம் வெளியீடு செய்தது.

கேரன்ஸ் காரின் காஸ்ட்லீயான வெர்சனாக புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கு முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், காரின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இந்த புதிய காரின் அறிமுகத்தின்போது, கேரன்ஸ் காரின் விற்பனை நிலவரத்தையும் கியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

carens selling with petrol engine

கியா தெரிவித்துள்ளதன்படி பார்க்கும்போது, இந்தியாவில் கியா கேரன்ஸ் காரை வாங்குவோரில் 100இல் 58 சதவீதத்தினர் பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) உடன் இந்த காரை வாங்குகின்றனர். மீதி 42 சதவீதத்தினர் மட்டுமே டீசல் என்ஜின் உடன் இந்த காரை வாங்குகின்றனர். இதைவிட முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த காரின் டாப் வேரியண்ட்டை வாங்கவும் கணிசமான எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் விரும்புகின்றனர்.

இதனை கியா நிறுவனம் புரிந்துக் கொண்டதன் விளைவாகவே, சற்று விலைமிக்கதாக புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் கார் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும், கேரன்ஸ் காரை வாங்குவோரில் 32 சதவீதத்தினர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இந்த காரை வாங்க விரும்புவதாகவும் கியா தெரிவித்துள்ளது. கேரன்ஸ் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை 3இல் இரு என்ஜின் ஆப்ஷன்கள் உடன் கியா வழங்குகிறது.

carens selling with petrol engine

1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் கொடுக்கப்படுகிறது. மற்ற இரு என்ஜின் ஆப்ஷன்களான 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் என்கிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றன.

2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான கேரன்ஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் எம்பிவி கார்கள் பிரிவில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta) கார்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போதிலும், கியா கேரன்ஸ் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ள புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கும், 2 வருடங்களாக விற்பனையில் இருக்கும் கேரன்ஸ் காருக்கும் தோற்றத்தில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப வசதிகளிலும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக, கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் லெவல்-2 அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தற்போதைய கேரன்ஸ் காரின் அப்டேட் வெர்சனாக புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டீசல் கார்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் குறைந்து, பெட்ரோல் கார்களுக்கு மார்க்கெட் அதிகரித்து வருவதை கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கையும் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இந்த காரை வாங்க 32 சதவீதம் பேர் விரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனெனில், உலகளவில் இன்னமும் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை அதிகம் விரும்பும் மக்களை கொண்ட நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 9, 2025, 11:15 [IST]
English summary
Kia carens mostly selling with petrol engine option check all details here
மேலும்... #kia #kia carens #petrol engine #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+