மாருதி வயித்துல புளியை கரைக்கும் புது 7 சீட்டர் கார்! மே 8ம் தேதி நடக்கப்போற சம்பவத்துக்குதான் நாடே வெயிட்டிங்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா. இதற்கு நேரடி போட்டி மாடலாக இருப்பது கியா கேரன்ஸ் ஆகும். இந்த காரின் கடந்த 2024-25ம் நிதியாண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் கியா நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 64,609 கியா கேரன்ஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நிதியாண்டில், அதாவது கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 63,167 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் கியா கேரன்ஸ் கார் விற்பனையில் 2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்திய சந்தையில் கடந்த 2024-25ம் நிதியாண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஏழு இருக்கை கார்களின் பட்டியலில் கியா கேரன்ஸ் 6வது இடத்தை பிடித்துள்ளது.

Kia Carens Side View

முதல் 5 இடங்களில் முறையே மாருதி சுஸுகி எர்டிகா, மஹிந்திரா ஸ்கார்பியோ, டொயோட்டா இன்னோவா (க்ரிஸ்ட்டா + ஹைக்ராஸ்), மஹிந்திரா பொலிரோ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் கியா கேரன்ஸ் 6வது இடத்தை பிடித்துள்ளது.

ஆனால் வரும் காலங்களில் கியா கேரன்ஸ் கார் இந்த பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. கியா கேரன்ஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பதுதான் இதற்கு காரணம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் மே 8ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Kia Carens

இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, தற்போது விற்பனையில் உள்ள பழைய மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். அதாவது இந்த 2 மாடல்களும் ஒன்றாகவே விற்பனை செய்யப்படவுள்ளன.

எனவே ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு புதிய பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா கேரன்ஸ் கார் இந்திய சந்தையில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இந்த கார் மீது வாடிக்கையாளர்களுக்கு சிறிய சந்தேகம் இருந்தது. ஆனால் பின் நாட்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கியா கேரன்ஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதன் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கேரன்ஸ் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த சூழலில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் கியா கேரன்ஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொறுத்தவரை டிசைன் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அத்துடன் புதிய வசதிகளும் வழங்கப்படவுள்ளன. இதன் காரணமாக விலை சற்று உயர்த்தப்படலாம். ஆனால் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 23:42 [IST]
English summary
Kia carens sales report financial year 2024 25 2 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+