சேலத்துல இருந்து பெங்களூர் வர வெறும் 30 ரூபாதான் செலவாகுமா! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பிரபல நிறுவனம்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 6,530 கியா கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 5,672 கியா கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 858 கியா கேரன்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கியா கேரன்ஸ் கார் விற்பனையில் 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த கார் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் ஆகியவை ஆகும்.

இதில், கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் ஆரம்ப விலை 11.08 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இதில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி காரை இயக்க மிகவும் குறைவான செலவே ஆகும். ஏனெனில் அது எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு வெறும் 1.05 ரூபாய் மட்டுமே செலவாகும் என கார்தேக்கோ தளம் தெரிவிக்கிறது. அப்படியானால் சேலத்தில் இருந்து பெங்களூர் வர (சுமார் 200 கிலோ மீட்டர்கள்), வெறும் 210 ரூபாய் மட்டுமே செலவு ஆகும்.
இது 7 சீட்டர் கார் ஆகும். எனவே 7 பேர் பயணம் செய்ய முடியும். இந்த வகையில் பார்த்தால், சேலத்தில் இருந்து பெங்களூர் வர ஒருவருக்கு வெறும் 30 ரூபாய் மட்டுமே செலவு ஆகும். எனவே பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலையால் பாதிக்கப்பட்டவர்கள், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரை தேர்வு செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) போன்ற அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய எம்பிவி ரக கார்களுக்கு எல்லாம், கியா கேரன்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








