வெறும் 62 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! எல்லாமே நல்லா இருந்தும் ஏன் விக்கல?

கியா நிறுவனத்தின் கார்னிவெல் கார் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று சிறப்பாக விற்பனையாகி வந்த நிலையில் திடீரென அந்த காரின் விற்பனையில் மண்ணை அள்ளி போட்டது போல் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மாதம் வெறும் 62 பேர் தான் இந்த காரை வாங்கியுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாடல் கார்களும் கடந்த மாதம் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்ற தகவல் இடம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் கியா கார்னிவெல் காரை வெறும் 62 கார்கள் விற்பனை செய்துள்ளதாக இதில் தெரிவித்துள்ளது.

Kia Carnival Sales July 2025

கடந்த ஜூன் மாதம் இந்த காரை வெறும் 47 பேர் தான் வாங்கியிருந்த நிலையில் தற்போது அதை ஒப்பிடும் போது விற்பனை அதிகம் தான் என்றாலும் எண்ணிக்கை அடிப்படையில் குறைவான எண்ணிக்கையில் தான் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் விற்பனை கடந்த 3 மாதங்களாக இரட்டை இலக்கமாக விற்பனை குறைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்நிறுவனம் மொத்தம் 239 கார்களை விற்பனை செய்திருந்தது. மார்ச் மாதம் 230 கார்களும், ஏப்ரல் மாதம் 161 கார்களும் விற்பனையாகியிருந்த. திடீரென மே மாதம் வெறும் 44 கார்கள், ஜூன் மாதம் 47 கார்கள், ஜூலை மாதம் 62 கார்கள் என விற்பனை குறைந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால் அடுத்தடுத்த மாதங்களில் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

Kia Carnival Sales July 2025

கியா கார்னிவெல் காரை பொருத்தவரை ஒரு பிரிமியம் எம்பிவி ரக காராக இருக்கிறது. இதன் விலை அதிகமாக இருப்பது இதன் விற்பனை குறைவிற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இந்த காரின் உட்புறம் டுயல் டோன் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. நேவி மற்றும் மிஸ்டிரி கிரே ஆகிய நிறங்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 12 வழிகளில் டிரைவர் சீட்டை அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக இருக்கிறது. முன்பக்க பயணிகள் சீட்டை 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

இந்த காரில் முன்பக்க சீட்டில் வென்டிலேஷன் மற்றும் ஹீட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. கால் வைக்கும் பகுதியிலும் வென்டிலேஷன் மற்றும் லெக் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 5155 மிமீ நீளம், 1995 மிமீ அகலம், 1775 மிமீ உயரம் மற்றும் 3090 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது.

Kia Carnival Sales July 2025

இந்த காரில் 2.2 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் இ-விஜிடி சிஆர்டிஐ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 193 பிஎஸ் பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் லிட்டருகஅக 14.85 கி.மீ மைலேஜை தருகிறது.

இந்த கார் எக்கோ, நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஸ்மார்ட் ஆகிய ரைடு மோடுகள் உள்ளன. இந்த காரில் 7 பேர் தாராளமாக பயணிக்கலாம். இந்த காரில் பாதுகாப்பிற்காக 8 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல், லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காஸ்ட்லி கார்களின் விற்பனை குறைவாக இருக்கும். ஆனால் இந்த கார் 3 இலக்க விற்பனையை பெற்று வந்த நிலையில் தீடீரென விற்பனை குறைந்துள்ளது. இந்த காரில் அப்டேட் வந்தால் விற்பனை மீண்டும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 19, 2025, 8:44 [IST]
English summary
Kia carnival sales july 2025 sold 62 units details
மேலும்... #kia #india #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X