இன்னோவா எல்லாம் ஒரம் போ! கம்மி ரேட்ல இந்த காரை டாக்ஸியா ஓட்டலாம்!

கியா நிறுவனம் தனது கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் டேக்ஸி வேரியன்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கியா நிறுவனம் கமர்ஷியல் வாகன மார்கெட்டிற்குள் நுழைகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த 2019ம் ஆண்டு கியா நிறுவனம் இந்தியாவில் காலடி தடத்தை எடுத்து வைத்தது. இந்நிறுவனம் பல தரமான கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது கமர்ஷியல் வாகன செக்மெண்டிற்குள்ளும் நுழைந்துள்ளது. இந்நிறுவனம் தனி நபர் கார்களுக்கு பிரபலமான நிலையில் இந்த புதிய முயற்சி மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

Kia Clavis EV Taxi

Team BHP தளத்தில் வெளியான செய்தியில் உள்ள ஆவணங்களின்படி கியா நிறவனம் தனது கேரன்ஸ் இவி காரை டாக்ஸி காராக மாற்ற முடிவு செய்துள்ளது. முக்கியமாக இதன் HTM என்ற பெயரில் இந்த காரின் வேரியன்டிற்கு பெயர் வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த காரின் தனிநபர் வாகனங்களை பொருத்தவரை HTK+, HTX, HTX ER, மற்றும் HTX+ ER ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

HTM வேரியன்டை பொருத்தவரை HTX+ வேரியன்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த காரில் 16 இன்ச் கருப்பு நிற அலாய் வீல்கள், ஸ்டார் மேப் கனெக்டெட் எல்இடி டிஆர்எல், டெயில் லைட்டு மற்றும் ஃபாக் லைட்டுகள், ஆக்டிவ் ஏர்ஃபிளாப்கள், முன்பக்கம் 25 லிட்டர் அளவுள்ள ஸ்டோரேஜ் வசதி, ஆட்டோ ஃபோல்டிங் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Kia Clavis EV Taxi

இந்த காரின் உட்புறம் பல பிரிமியம் அம்சங்கள் உள்ளன. முக்கியமாக இதில் 12.25 இன்ச் எச்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.25 இன்ச் எச்டி டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யூஎஸ்பி சி போர்ட்கள், 6 ஸ்பீக்கர் சிஸ்டம், ஃபேபரிக் மற்றும் செமி லெதரேட் சீட்டுகள், கருப்பு மற்றும் பேட்ஜ் நிற டுயல் டோன் கலர் ஸ்கீம் ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த காரின் டாக்ஸி வேரியன்டில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 6 பேனிக் பட்டன்கள், ஸ்பீடு லிமிட்டர்கள் உள்ளது. அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Kia Clavis EV Taxi

இந்த காரில் 133 எச்பி பவரும் 255 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இந்த காரில் பேட்டரி பேக் 42kWh பேட்டரி பேக் உடன் உள்ளது. இந்த கார் ஸ்டாண்டர்டு வேரியன்டில் ஒரு முறை சார்ஜ் போட்டால் 404 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் முதன் முறையாக கமர்ஷியல் மார்கெட்டிற்குள் வருகிறது. இது நேரடியாக இன்னோவா காருக்கு போட்டியாக இருக்கும் இந்த செக்மெண்டில் இன்னோவா கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த இவி கார் நிச்சயம் கமர்ஷியல் வாகன மார்கெட்டில் பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 27, 2025, 16:00 [IST]
English summary
Kia clavis ev taxi launch carens variant
மேலும்... #kia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X